புலவரை அறியாப் |
15. திருமால் |
திருமாலிருங்குன்றத்தின் சிறப்பு | |
புல வரை அறியாப் புகழொடு பொலிந்து, |
|
நில வரை தாங்கிய நிலைமையின் பெயராத் |
|
தொலையா நேமி முதல், தொல் இசை அமையும் |
|
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடுங் குன்றம் |
|
5 |
பல எனின், ஆங்கு அவை பலவே: பலவினும், |
நிலவரை ஆற்றி, நிறை பயன் ஒருங்கு உடன் |
|
நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே: |
|
சிலவினும் சிறந்தன, தெய்வம் பெட்புறும் |
|
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய |
|
10 |
குல வரை சிலவே: குல வரை சிலவினும் |
சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும், |
|
புல்லிய சொல்லும் பொருளும் போலவும், |
|
எல்லாம் வேறு வேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் |
|
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம். |
|
15 |
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை |
ஏறுதல் எளிதோ, வீறு பெறு துறக்கம்? |
|
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் |
|
எளிதின் பெறல் உரிமை ஏத்துகம், சிலம்ப. |
|
'திருமால் பலராமனுடன் அமர்ந்துள்ள நிலை நினைந்து ஏத்துக' எனல் | |
அரா அணர் கயந் தலைத் தம்முன் மார்பின் |
|
20 |
மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி, |
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய, |
|
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின் |
|
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் |
|
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் |
|
25 |
நாமத் தன்மை நன்கனம் படி எழ, |
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து, |
|
மன் புனல் இள வெயில் வளாவ இருள் வளர்வென, |
|
பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே |
|
நினைமின், மாந்தீர்! கேண்மின், கமழ் சீர்! |
|
மாயோனை ஒத்த நிலையுடைத்து திருமாலிருஞ்சோலைக் குன்றம் | |
30 |
சுனையெலாம் நீலம் மலர, சுனை சூழ் |
சினை யெலாம் செயலை மலர, காய் கனி |
|
உறழ, நனை வேங்கை ஒள் இணர் மலர, |
|
மாயோன் ஒத்த இன் நிலைத்தே. |
|
சென்று தொழ மாட்டாதார் அம் மலையைக் கண்டு தொழுக எனல் | |
சென்று தொழுகல்லீர்! கண்டு பணிமின்மே |
|
35 |
இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே |
பெருங் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது |
|
கண்டு, மயர் அறுக்கும் காமக் கடவுள். |
|
குன்றத்தில் பிறக்கும் ஓசைகள் | |
மக முயங்கு மந்தி வரைவரை பாய, |
|
முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட, |
|
40 |
மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவ, |
குருகு இலை உதிர, குயிலினம் கூவ, |
|
பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் |
|
நா நவில் பாடல் முழவு எதிர்ந்தன்ன, |
|
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க் |
|
45 |
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று. |
குன்றத்தானைச் சுற்றம் புடை சூழ்ப் போற்றுமின் | |
தையலவரொடும், தந்தாரவரொடும், |
|
கைம் மகவொடும், காதலவரொடும், |
|
தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்மின் |
|
புவ்வத் தாமரை புரையும் கண்ணன், |
|
50 |
வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன், |
எவ்வயின் உலகத்தும் தோன்றி, அவ் வயின் |
|
மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் |
|
அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான். |
|
பலதேவ வாசுதேவர்கள் இருவரையும் வாழ்த்துதல் | |
கள் அணி பசுந் துளவினவை, கருங் குன்றனையவை; |
|
55 |
ஒள் ஒளியவை, ஒரு குழையவை; |
புள் அணி பொலங் கொடியவை; |
|
வள் அணி வளை நாஞ்சிலவை, |
|
சலம் புரி தண்டு ஏந்தினவை; |
|
வலம்புரி வய நேமியவை; |
|
60 |
வரி சிலை வய அம்பினவை; |
புகர் இணர் சூழ் வட்டத்தவை; புகர் வாளவை: |
|
என ஆங்கு |
|
நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி |
|
இது என உரைத்த[லி]ன், எம் உள் அமர்ந்து இசைத்து, இறை, |
|
65 |
'இருங்குன்றத்து அடி உறை இயைக!' என, |
பெரும் பெயர் இருவரைப் பரவுதும், தொழுதே. |
|
கடவுள் வாழ்த்து இளம்பெருவழுதியார் பாட்டு மருத்துவன் நல்லச்சுதனார் இசை பண் நோதிறம் |