மாயோன் கொப்பூழ் |
தி 8. |
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் |
|
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின் |
|
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து |
|
அரும் பொகுட்டு அனைத்தே, அண்ணல் கோயில்; |
|
5 |
தாதின் அனையர், தண் தமிழ்க் குடிகள்; |
தாது உண் பறவை அனையர், பரிசில் வாழ்நர்; |
|
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த |
|
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப |
|
ஏம இன் துயில் எழுதல் அல்லதை, |
|
10 |
வாழிய வஞ்சியும் கோழியும் போலக் |
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. |