ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் |
வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன், |
|
கயந் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்ப, |
|
புலிப் பகை வென்ற புண் கூர் யானை |
|
கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின், |
|
5 |
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் |
குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி, |
|
சிறு பல் மின்மினி போல, பல உடன் |
|
மணி நிற இரும் புதல் தாவும் நாட! |
|
யாமே அன்றியும் உளர்கொல் பானாள், |
|
10 |
உத்தி அரவின் பைத் தலை துமிய, |
உர உரும் உரறும் உட்கு வரு நனந்தலை, |
|
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணையாக, |
|
கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி |
|
தேராது வரூஉம் நின்வயின் |
|
15 |
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே? |
இரவுக் குறிக்கண் வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவு கடாயது. - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் | |
உரை |
மேல் |