ஆவூர் மூலங்கிழார் |
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த |
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, |
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை, |
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும் |
|
5 |
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள், |
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை, |
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி, |
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும் |
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி, |
|
10 |
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே, |
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து, |
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு, |
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி, |
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு, |
|
15 |
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து, |
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள், |
|
இரவுத் துயில் மடிந்த தானை, |
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே. |
|
தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர் மூலங் கிழார் | |
உரை |
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும் |
|
மூட்டுறு கவரி தூக்கியன்ன, |
|
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர் |
|
மூதா தின்றல் அஞ்சி, காவலர் |
|
5 |
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ, |
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும் |
|
தீம் புனல் ஊர! திறவதாகக் |
|
குவளை உண்கண் இவளும் யானும் |
|
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை, |
|
10 |
காயா ஞாயிற்றாக, தலைப்பெய, |
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து, |
|
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும! |
|
கள்ளும் கண்ணியும் கையுறையாக |
|
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் |
|
15 |
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி, |
தணி மருங்கு அறியாள், யாய் அழ, |
|
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே? |
|
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
உய் தகை இன்றால் தோழி! பைபய, |
|
கோங்கும் கொய் குழை உற்றன; குயிலும் |
|
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும்; |
|
நாடு ஆர் காவிரிக் கோடு தோய் மலிர் நிறைக் |
|
5 |
கழை அழி நீத்தம் சாஅய வழி நாள், |
மழை கழிந்தன்ன மாக் கால் மயங்கு அறல், |
|
பதவு மேயல் அருந்து துளங்கு இமில் நல் ஏறு, |
|
மதவுடை நாக் கொடு அசை வீடப் பருகி, |
|
குறுங் காற் காஞ்சிக் கோதை மெல் இணர்ப் |
|
10 |
பொன் தகை நுண் தாது உறைப்ப, தொக்கு உடன், |
குப்பை வார் மணல் எக்கர்த் துஞ்சும், |
|
யாணர் வேனில்மன், இது |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே? |
|
பிரிவின்கண் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - ஆவூர் மூலங்கிழார் | |
உரை |
மேல் |