பாடினோர் பகுதி |
உறையூர் மருத்துவன் தாமோதரனார் |
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர், |
|
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை |
|
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி, |
|
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப, |
|
5 |
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், |
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் |
|
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில், |
|
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு |
|
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ, |
|
10 |
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று |
வான் கொள் தூவல் வளி தர உண்கும்; |
|
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக் |
|
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி! |
|
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி |
|
15 |
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் |
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த |
|
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத் |
|
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே. |
|
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
வேனிற் பாதிரிக் கூனி மா மலர் |
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், |
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, |
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் |
|
5 |
பொம்மல் ஓதி பொதுள வாரி, |
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் |
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் |
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் |
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள |
|
10 |
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை |
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, |
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர் |
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், |
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, |
|
15 |
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, |
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் |
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், |
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு |
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, |
|
20 |
வெள் அரா மிளிர வாங்கும் |
பிள்ளை எண்கின் மலைவயினானே. |
|
உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார் | |
உரை |
மேல் |