பாடினோர் பகுதி |
உறையூர் முதுகூத்தனார் |
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட |
|
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ, |
|
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் |
|
சென்று சேர்பு ஒல்லார்ஆயினும், நினக்கே |
|
5 |
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர் |
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண், |
|
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று |
|
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற் |
|
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள், |
|
10 |
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் |
தீ இல் அடுப்பின் அரங்கம் போல, |
|
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும், |
|
தோளா முத்தின் தெண் கடற் பொருநன் |
|
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன் |
|
15 |
நல் எழில் நெடு வேய் புரையும் |
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே. |
|
'தலைமகன் பிரியும்' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- உறையூர் |
முதுகூத்தனார் | |
உரை |
பூங் கணும் நுதலும் பசப்ப, நோய் கூர்ந்து, |
|
ஈங்கு யான் வருந்தவும், நீங்குதல் துணிந்து, |
|
வாழ்தல் வல்லுநர் ஆயின், காதலர் |
|
குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர், |
|
5 |
படு மணி இயம்பப் பகல் இயைந்து, உமணர் |
கொடு நுகம் பிணித்த செங் கயிற்று ஒழுகைப் |
|
பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து, |
|
எறி வளி சுழற்றும் அத்தம், சிறிது அசைந்து, |
|
ஏகுவர்கொல்லோ தாமே பாய் கொள்பு, |
|
10 |
உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருை |
நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட |
|
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில், |
|
புலி புக்கு ஈனும் வறுஞ் சுனை, |
|
பனி படு சிமையப் பல் மலை இறந்தே? |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது; பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - உறையூர் முதுகூத்தனார் | |
உரை |
மேல் |