எழூஉப்பன்றி நாகன் குமரனார் |
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி! |
|
குவளை உண்கண் தெண் பனி மல்க, |
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை |
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின் |
|
5 |
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி, |
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை, |
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில், |
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் |
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது, |
|
10 |
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ, |
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு |
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும் |
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு |
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் |
|
15 |
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி, |
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள், |
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட் |
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி |
|
நல் நிறம் மருளும் அரு விடர் |
|
20 |
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே. |
தலைமகன் சிறைப்புறத்தானாகத், தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார் | |
உரை |
செவ் வீ ஞாழற் கருங் கோட்டு இருஞ் சினைத் |
|
தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை |
|
மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப, |
|
இனிப் புலம்பின்றே கானலும்; நளி கடல் |
|
5 |
திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் |
பல் மீன் கூட்டம் என்னையர்க் காட்டிய, |
|
எந்தையும் செல்லுமார் இரவே; அந்தில் |
|
அணங்குடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி, |
|
யாயும் ஆயமோடு அயரும்; நீயும், |
|
10 |
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி, |
கோங்கு முகைத்தன்ன குவிமுலை ஆகத்து, |
|
இன் துயில் அமர்ந்தனைஆயின், வண்டு பட |
|
விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர், |
|
பூ வேய் புன்னை அம் தண் பொழில், |
|
15 |
வாவே தெய்ய, மணந்தனை செலற்கே. |
தோழி இரவுக்குறி வந்த தலைமகற்குப் பகற்குறி நேர்ந்தது. - எழுஉப்பன்றி நாகன் குமரனார் | |
உரை |
மேல் |