பாடினோர் பகுதி |
ஒக்கூர் மாசாத்தியார் |
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத் |
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை |
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த |
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன, |
|
5 |
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில் |
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும் |
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால, |
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய, |
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய், |
|
10 |
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த |
வண்டு உண் நறு வீ துமித்த நேமி |
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள், |
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக, |
|
செல்லும், நெடுந்தகை தேரே |
|
15 |
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே! |
வினை முற்றிய தலைமகன் கருத்து உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென, |
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும் |
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த |
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய், |
|
5 |
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், |
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண், |
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ, |
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே; |
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ? |
|
10 |
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? |
உரைமதி வாழியோ, வலவ!' என, தன் |
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி, |
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை; |
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே. |
|
வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தியார் | |
உரை |
மேல் |