பாடினோர் பகுதி |
கயமனார் |
'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின; |
|
தலை முடிசான்ற; தண் தழை உடையை; |
|
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்; |
|
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய; |
|
5 |
காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை; |
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்! |
|
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என, |
|
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி, |
|
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை |
|
10 |
ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி! |
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர் |
|
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள் |
|
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை, |
|
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென, |
|
15 |
பிற்படு பூசலின் வழிவழி ஓடி, |
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை, |
|
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு |
|
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி, |
|
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல், |
|
20 |
ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த |
துய்த் தலை வெண் காழ் பெறூஉம் |
|
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே. |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப்பிணாக்கண்டு, சொல்லியது. - கயமனார். | |
உரை |
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும், |
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும், |
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ, |
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென, |
|
5 |
முயங்கினள் வதியும்மன்னே! இனியே, |
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள், |
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி, |
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் |
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி |
|
10 |
வல்லகொல், செல்லத் தாமே கல்லென |
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின், |
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த, |
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி |
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும், |
|
15 |
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல், |
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து |
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின், |
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர், |
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர், |
|
20 |
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி, |
வைகுறு மீனின் தோன்றும் |
|
மை படு மா மலை விலங்கிய சுரனே? |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
வேர் முழுது உலறி நின்ற புழற்கால், |
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும், |
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி |
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள, |
|
5 |
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு |
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு |
|
வாள்வரி பொருத புண் கூர் யானை |
|
புகர் சிதை முகத்த குருதி வார, |
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும் |
|
10 |
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர் |
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன் |
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய |
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல, |
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில் |
|
15 |
குஞ்சரக் குரல குருகோடு ஆலும், |
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை, |
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின், |
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற் |
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது, |
|
20 |
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம், |
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என் |
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே! |
|
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
பசும் பழப் பலவின் கானம் வெம்பி, |
|
விசும்பு கண் அழிய, வேனில் நீடி, |
|
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் |
|
நாறு உயிர் மடப் பிடி தழைஇ, வேறு நாட்டு |
|
5 |
விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரி, |
களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் |
|
வெவ் வரை அத்தம் சுட்டி, பையென, |
|
வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுற, |
|
திதலை அல்குல் குறுமகள் அவனொடு |
|
10 |
சென்று பிறள் ஆகிய அளவை, என்றும் |
படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ, |
|
மனை மருண்டு இருந்த என்னினும், நனை மகிழ் |
|
நன்னராளர் கூடு கொள் இன் இயம் |
|
தேர் ஊர் தெருவில் ததும்பும் |
|
15 |
ஊர் இழந்தன்று, தன் வீழ்வு உறு பொருளே. |
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
'அருஞ் சுரம் இறந்த என் பெருந் தோட் குறுமகள் |
|
திருந்துவேல் விடலையொடு வரும்' என, தாயே, |
|
புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி, |
|
மனை மணல் அடுத்து, மாலை நாற்றி, |
|
5 |
உவந்து, இனிது அயரும் என்ப; யானும், |
மான் பிணை நோக்கின் மட நல்லாளை |
|
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், |
|
இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள், |
|
கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய |
|
10 |
நலம் புனை உதவியும் உடையன்மன்னே; |
அஃது அறிகிற்பினோ நன்றுமன் தில்ல; |
|
அறுவை தோயும் ஒரு பெருங் குடுமி, |
|
சிறு பை நாற்றிய பல் தலைக் கொடுங் கோல், |
|
ஆகுவது அறியும் முதுவாய், வேல! |
|
15 |
கூறுகமாதோ, நின் கழங்கின் திட்பம்; |
மாறா வருபனி கலுழும் கங்குலில், |
|
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர், |
|
எம் மனை முந்துறத் தருமோ? |
|
தன் மனை உய்க்குமோ? யாது அவன் குறிப்பே? |
|
மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
சீர் கெழு வியன் நகர்ச் சிலம்பு நக இயலி, |
|
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும், |
|
'வாராயோ!' என்று ஏத்தி, பேர் இலைப் |
|
பகன்றை வால் மலர் பனி நிறைந்தது போல் |
|
5 |
பால் பெய் வள்ளம் சால்கை பற்றி, |
'என் பாடு உண்டனைஆயின், ஒரு கால், |
|
நுந்தை பாடும் உண்' என்று ஊட்டி, |
|
'பிறந்ததற்கொண்டும் சிறந்தவை செய்து, யான் |
|
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள் |
|
10 |
அறனிலாளனொடு இறந்தனள், இனி' என, |
மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் |
|
'பொன் வார்ந்தன்ன வை வால் எயிற்றுச் |
|
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் |
|
பொரி அரை விளவின் புன் புற விளை புழல், |
|
15 |
அழல் எறி கோடை தூக்கலின், கோவலர் |
குழல் என நினையும் நீர் இல் நீள் இடை, |
|
மடத் தகை மெலியச் சாஅய், |
|
நடக்கும்கொல்? என, நோவல் யானே. |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
நனை விளை நறவின் தேறல் மாந்தி, |
|
புனை வினை நல் இல் தரு மணல் குவைஇ, |
|
'பொம்மல் ஓதி எம் மகள் மணன்' என, |
|
வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால், |
|
5 |
புதுவது புனைந்த சேயிலை வெள் வேல், |
மதி உடம்பட்ட மை அணற் காளை |
|
வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்து, |
|
தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு, நின் |
|
தண் நறு முச்சி புனைய, அவனொடு |
|
10 |
கழை கவின் போகிய மழை உயர் நனந்தலை, |
களிற்று இரை பிழைத்தலின், கய வாய் வேங்கை |
|
காய் சினம் சிறந்து, குழுமலின் வெரீஇ, |
|
இரும் பிடி இரியும் சோலை |
|
அருஞ் சுரம் சேறல் அயர்ந்தனென், யானே. |
|
தலைமகற்குப் போக்கு உடன்பட்ட தோழி தலைமகட்குப் போக்கு உடன்படச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; |
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன; |
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் |
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் |
|
5 |
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் |
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் |
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், |
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், |
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் |
|
10 |
போது வந்தன்று, தூதே; நீயும் |
கலங்கா மனத்தை ஆகி, என் சொல் |
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! |
|
தெற்றி உலறினும், வயலை வாடினும், |
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், |
|
15 |
நின்னினும் மடவள் நனி நின் நயந்த |
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் |
|
புலி மருள் செம்மல் நோக்கி, |
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! |
|
உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார் | |
உரை |
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி, |
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த |
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி, |
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி! |
|
5 |
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என, |
யாம் தற் கழறுங் காலை, தான் தன் |
|
மழலை இன் சொல், கழறல் இன்றி, |
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல் |
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள், |
|
10 |
ஏதிலாளன் காதல் நம்பி, |
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் |
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும் |
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய, |
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம், |
|
15 |
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி |
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும் |
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள் |
|
செம் புடைச் சிறு விரல் வரித்த |
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
பசித்த யானைப் பழங்கண் அன்ன |
|
வறுஞ் சுனை முகந்த கோடைத் தெள் விளி |
|
விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப, |
|
கதிர்க் கால் அம் பிணை உணீஇய, புகல் ஏறு |
|
5 |
குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது, |
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் |
|
படு மணி இன நிரை உணீஇய, கோவலர் |
|
விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல், |
|
கன்றுடை மடப் பிடி களிறொடு தடவரும் |
|
10 |
புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர், |
துணையொடு துச்சில் இருக்கும்கொல்லோ? |
|
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு |
|
எல்லி முன்னுறச் செல்லும்கொல்லோ? |
|
எவ் வினை செயுங்கொல்? நோகோ யானே! |
|
15 |
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ, |
யாய் அறிவுறுதல் அஞ்சி, |
|
வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே. |
|
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - கயமனார் | |
உரை |
தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள், |
|
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ, |
|
காடும் கானமும் அவனொடு துணிந்து, |
|
நாடும் தேயமும் நனி பல இறந்த |
|
5 |
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, |
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும், |
|
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த |
|
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய, |
|
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் |
|
10 |
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, |
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி, |
|
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும், |
|
ஆர நீர் ஊட்டிப் புரப்போர் |
|
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே! |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட, |
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப, |
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர், |
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக் |
|
5 |
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் |
எளியவாக, ஏந்து கொடி பரந்த |
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத் |
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத் |
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை |
|
10 |
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி, |
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் |
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து, |
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும் |
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக் |
|
15 |
கோடை வெவ் வளிக்கு உலமரும் |
புல் இலை வெதிர நெல் விளை காடே. |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் | |
உரை |
மேல் |