பாடினோர் பகுதி |
கருவூர்க் கண்ணம்பாளனார் |
நகை நனி உடைத்தால் தோழி! தகை மிக, |
|
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி, |
|
வீ ததை கானல் வண்டல் அயர, |
|
கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து, |
|
5 |
தண் கயத்து அமன்ற ஒண் பூங் குவளை |
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி |
|
பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி, |
|
நல் வரல் இள முலை நோக்கி, நெடிது நினைந்து, |
|
நில்லாது பெயர்ந்தனன், ஒருவன்; அதற்கே |
|
10 |
புலவு நாறு இருங் கழி துழைஇ, பல உடன் |
புள் இறை கொண்ட முள்ளுடை நெடுந் தோட்டுத் |
|
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ, |
|
படப்பை நின்ற முடத் தாட் புன்னைப் |
|
பொன் நேர் நுண் தாது நோக்கி, |
|
15 |
என்னும் நோக்கும், இவ் அழுங்கல் ஊரே. |
இரந்து பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகளைக்குறைநயப்பக் கூறியது; தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியதூஉம் ஆம். - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி, |
|
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம் |
|
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம் |
|
பயம் கெடத் திருகிய பைது அறு காலை, |
|
5 |
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு, |
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார், |
|
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி, |
|
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம் |
|
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு, |
|
10 |
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ! |
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் |
|
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க, |
|
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று |
|
திரு நுதல் பொலிந்த என் பேதை |
|
15 |
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே! |
மகட் போக்கிய தாய் சொல்லியது. - கருவூர்க் கண்ணம்பாளனார் | |
உரை |
மேல் |