பாடினோர் பகுதி |
கல்லாடனார் |
கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின், |
|
வில்லோர் தூணி வீங்கப் பெய்த |
|
அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை, |
|
செப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு, |
|
5 |
இழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் |
உழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு, |
|
ஆலி வானின் காலொடு பாறி, |
|
துப்பின் அன்ன செங் கோட்டு இயவின், |
|
நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் |
|
10 |
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் |
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய |
|
தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி, |
|
நெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும் |
|
குன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து, |
|
15 |
ஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, |
துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் |
|
எம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண் |
|
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ, |
|
பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி, |
|
20 |
கன்று புகு மாலை நின்றோள் எய்தி, |
கை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி, |
|
பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி, |
|
தொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ |
|
நாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல், |
|
25 |
அம் தீம் கிளவிக் குறுமகள் |
மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே? |
|
வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் |
|
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி, |
|
கறை அடி மடப் பிடி கானத்து அலற, |
|
களிற்றுக் கன்று ஒழித்த உவகையர், கலி சிறந்து, |
|
5 |
கருங் கால் மராஅத்துக் கொழுங் கொம்பு பிளந்து, |
பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி, |
|
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர், |
|
நறவு நொடை நல் இல் புதவுமுதற் பிணிக்கும் |
|
கல்லா இளையர் பெருமகன் புல்லி |
|
10 |
வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும், |
சேயர் என்னாது, அன்பு மிகக் கடைஇ, |
|
எய்த வந்தனவால்தாமே நெய்தல் |
|
கூம்பு விடு நிகர் மலர் அன்ன |
|
ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே. |
|
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
நன்று அல் காலையும் நட்பின் கோடார், |
|
சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின், |
|
புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் |
|
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி, |
|
5 |
காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் |
இளங் கள் கமழும் நெய்தல்அம் செறுவின் |
|
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து, |
|
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற, |
|
நல்காது துறந்த காதலர், 'என்றும் |
|
10 |
கல் பொரூஉ மெலியாப் பரட்டின் நோன் அடி |
அகல்சூல் அம் சுரைப் பெய்த வல்சியர் |
|
இகந்தனர்ஆயினும், இடம் பார்த்துப் பகைவர் |
|
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் |
|
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் |
|
15 |
கனை இருஞ் சுருணைக் கனி காழ் நெடு வேல் |
விழவு அயர்ந்தன்ன கொழும் பல் திற்றி |
|
எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர், |
|
நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் |
|
எறிபடை கழீஇய சேயரிச் சில் நீர் |
|
20 |
அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, |
சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் |
|
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, |
|
அழாஅம் உறைதலும் உரியம் பராரை |
|
அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் |
|
25 |
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, |
மெய் இவண் ஒழியப் போகி, அவர் |
|
செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'நுதலும் நுண் பசப்பு இவரும்; தோளும் |
|
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த |
|
பணை எழில் அழிய வாடும்; நாளும் |
|
நினைவல்மாது அவர் பண்பு' என்று ஓவாது |
|
5 |
இனையல் வாழி, தோழி! புணர்வர் |
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ, பொருள் புரிந்து |
|
அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்திருந்த |
|
மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் |
|
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார், |
|
10 |
திருத்திக் கொண்ட அம்பினர், நோன் சிலை |
எருத்தத்து இரீஇ, இடம் தொறும் படர்தலின், |
|
கீழ்ப்படு தாரம் உண்ணா, மேற் சினைப் |
|
பழம் போற் சேற்ற தீம் புழல் உணீஇய, |
|
கருங் கோட்டு இருப்பை ஊரும் |
|
15 |
பெருங் கை எண்கின் சுரன் இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -கல்லாடனார் | |
உரை |
கரை பாய் வெண் திரை கடுப்ப, பல உடன், |
|
நிரை கால் ஒற்றலின், கல் சேர்பு உதிரும் |
|
வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து, |
|
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர, |
|
5 |
சிலம்பி வலந்த வறுஞ் சினை வற்றல் |
அலங்கல் உலவை அரி நிழல் அசைஇ, |
|
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை, |
|
அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன, |
|
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின், |
|
10 |
வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய |
கெடுமான் இன நிரை தரீஇய, கலையே |
|
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் |
|
கடல் போல் கானம் பிற்பட, 'பிறர் போல் |
|
செல்வேம்ஆயின், எம் செலவு நன்று' என்னும் |
|
15 |
ஆசை உள்ளம் அசைவின்று துரப்ப, |
நீ செலற்கு உரியை நெஞ்சே! வேய் போல் |
|
தடையின மன்னும், தண்ணிய, திரண்ட, |
|
பெருந் தோள் அரிவை ஒழிய, குடாஅது, |
|
இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில், |
|
20 |
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய, |
வலம் படு கொற்றம் தந்த வாய் வாள், |
|
களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல் |
|
இழந்த நாடு தந்தன்ன |
|
வளம் பெரிது பெறினும், வாரலென் யானே. |
|
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
'தோளும் தொல் கவின் தொலைந்தன; நாளும் |
|
அன்னையும் அருந் துயர் உற்றனள்; அலரே, |
|
பொன் அணி நெடுந் தேர்த் தென்னர் கோமான், |
|
எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன், |
|
5 |
நேரா எழுவர் அடிப்படக் கடந்த |
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது' என, |
|
ஆழல் வாழி, தோழி! அவரே, |
|
மாஅல் யானை மறப் போர்ப் புல்லி |
|
காம்புடை நெடு வரை வேங்கடத்து உம்பர் |
|
10 |
அறை இறந்து அகன்றனர் ஆயினும், நிறை இறந்து |
உள்ளார்ஆதலோ அரிதே செவ் வேல் |
|
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி |
|
செல்லா நல் இசை நிறுத்த வல் வில் |
|
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த |
|
15 |
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி, |
நிலை பெறு கடவுள் ஆக்கிய, |
|
பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - கல்லாடனார் | |
உரை |
'யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்தன்ன நின் |
|
ஆக மேனி அம் பசப்பு ஊர, |
|
அழிவு பெரிது உடையையாகி, அவர்வயின் |
|
பழி தலைத்தருதல் வேண்டுதி; மொழி கொண்டு |
|
5 |
தாங்கல் ஒல்லுமோ மற்றே; ஆங்கு நின் |
எவ்வம் பெருமை உரைப்பின்; செய் பொருள் |
|
வயங்காதுஆயினும் பயம் கெடத் தூக்கி, |
|
நீடலர் வாழி, தோழி! கோடையில், |
|
குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது, |
|
10 |
தூம்புடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய, |
வேனில், வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து, |
|
யானைப் பெரு நிரை வானம் பயிரும் |
|
மலை சேண் இகந்தனர்ஆயினும், நிலை பெயர்ந்து, |
|
நாள் இடைப்படாமை வருவர், நமர்' என, |
|
15 |
பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியா |
நின் வாய் இன் மொழி நல் வாயாக |
|
வருவர் ஆயினோ நன்றே; வாராது, |
|
அவணர் காதலர்ஆயினும், இவண் நம் |
|
பசலை மாய்தல் எளிதுமன் தில்ல |
|
20 |
சென்ற தேஎத்துச் செய் வினை முற்றி, |
மறுதரல் உள்ளத்தர்எனினும், |
|
குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே. |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கல்லாடனார் | |
உரை |
மேல் |