காவன்முல்லைப் பூதனார், காவன் முல்லைப் பூதரத்தனார் |
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் |
|
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல், |
|
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத் |
|
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள், |
|
5 |
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச் |
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய், |
|
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப் |
|
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே, |
|
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர் |
|
10 |
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன் |
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, |
|
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், |
|
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், |
|
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், |
|
15 |
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை |
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, |
|
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் |
|
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, |
|
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் |
|
20 |
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் |
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த |
|
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் |
|
ஊறாது இட்ட உவலைக் கூவல், |
|
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் |
|
25 |
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, |
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் |
|
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |
|
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
'தம் நயந்து உறைவோர்த் தாங்கி, தாம் நயந்து |
|
இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ, |
|
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர்!' என, |
|
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது |
|
5 |
ஆபமன் வாழி, தோழி! கால் விரிபு |
உறுவளி எறிதொறும் கலங்கிய பொறி வரிக் |
|
கலைமான் தலையின் முதல்முதற் கவர்த்த |
|
கோடல்அம் கவட்ட குறுங் கால் உழுஞ்சில் |
|
தாறு சினை விளைந்த நெற்றம், ஆடுமகள் |
|
10 |
அரிக் கோற் பறையின், ஐயென ஒலிக்கும் |
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல், |
|
கள்ளி முள் அரைப் பொருந்தி, செல்லுநர்க்கு |
|
உறுவது கூறும், சிறு செந் நாவின் |
|
மணி ஓர்த்தன்ன தெண் குரல் |
|
15 |
கணி வாய், பல்லிய காடு இறந்தோரே! |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.-காவன்முல்லைப் பூதரத்தனார் | |
உரை |
'துனி இன்று இயைந்த துவரா நட்பின் |
|
இனியர் அம்ம, அவர்' என முனியாது |
|
நல்குவர் நல்ல கூறினும், அல்கலும், |
|
பிரியாக் காதலொடு உழையர் ஆகிய |
|
5 |
நமர்மன் வாழி, தோழி! உயர்மிசை |
மூங்கில் இள முளை திரங்க, காம்பின் |
|
கழை நரல் வியல் அகம் வெம்ப, மழை மறந்து |
|
அருவி ஆன்ற வெருவரு நனந்தலை, |
|
பேஎய் வெண் தேர் பெயல் செத்து ஓடி, |
|
10 |
தாஅம் பட்ட தனி முதிர் பெருங் கலை |
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது, அலங்குதலை |
|
விருந்தின் வெங் காட்டு வருந்தி வைகும் |
|
அத்த நெல்லித் தீஞ் சுவைத் திரள் காய் |
|
வட்டக் கழங்கின் தாஅய், துய்த் தலைச் |
|
15 |
செம் முக மந்தி ஆடும் |
நல் மர மருங்கின் மலை இறந்தோரே! |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை |
|
வலை வலந்தனைய ஆக, பல உடன் |
|
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின், |
|
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன |
|
5 |
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, |
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி, |
|
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி, |
|
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும் |
|
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே, |
|
10 |
செல்ப என்ப தோழி! யாமே, |
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த |
|
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து, |
|
இன்னா மொழிதும் என்ப; |
|
என் மயங்கினர்கொல், நம் காதலோரே? |
|
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். - காவன்முல்லைப் பூதனார் | |
உரை |
பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன |
|
வரி மென் முகைய நுண் கொடி அதிரல் |
|
மல்கு அகல் வட்டியர், கொள்வு இடம் பெறாஅர் |
|
விலைஞர், ஒழித்த தலை வேய் கான் மலர் |
|
5 |
தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி, |
தண் நறுங் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் |
|
பொதி மாண் முச்சி காண்தொறும், பண்டைப் |
|
பழ அணி உள்ளப்படுமால் தோழி! |
|
இன்றொடு சில் நாள் வரினும், சென்று, நனி |
|
10 |
படாஅவாகும், எம் கண்ணே கடாஅ |
வான் மருப்பு அசைத்தல்செல்லாது, யானை தன் |
|
வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை |
|
குன்று புகு பாம்பின் தோன்றும், |
|
என்றூழ் வைப்பின், சுரன் இறந்தோரே! |
|
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - காவன் முல்லைப் பூதனார் | |
உரை |
மேல் |