சாகலாசனார் |
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத் |
|
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும், |
|
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய், |
|
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல், |
|
5 |
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை, |
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே! |
|
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும் |
|
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி, |
|
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை, |
|
10 |
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து, |
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன், |
|
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை? |
|
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற் |
|
கரைய, வந்து விரைவனென் கவைஇ |
|
15 |
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா, |
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும் |
|
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து |
|
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின் |
|
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே? |
|
பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார் | |
இருங் கழி மலர்ந்த வள் இதழ் நீலம், |
|
புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து |
|
இன மீன் வேட்டுவர், ஞாழலொடு மிலையும் |
|
மெல் அம் புலம்ப! நெகிழ்ந்தன, தோளே; |
|
5 |
சேயிறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை |
பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் |
|
கானல்அம் பெருந் துறை நோக்கி, இவளே, |
|
கொய் சுவற் புரவிக் கை வண் கோமான் |
|
நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன, |
|
10 |
அம் மா மேனி தொல் நலம் தொலைய, |
துஞ்சாக் கண்ணள் அலமரும்; நீயே, |
|
கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் |
|
சேவலொடு புணராச் சிறு கரும் பேடை |
|
இன்னாது உயங்கும் கங்குலும், |
|
15 |
நும் ஊர் உள்ளுவை; நோகோ, யானே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது. -சாகலாசனார் | |
உரை |
மேல் |