செயலூர் இளம் பொன் சாத்தன் கொற்றனார் |
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும், |
|
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப் |
|
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண் |
|
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து |
|
5 |
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் |
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின் |
|
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் |
|
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை, |
|
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ, |
|
10 |
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை |
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் |
|
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும், |
|
வல்லே வருவர்போலும் வெண் வேல் |
|
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர் |
|
15 |
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த |
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின் |
|
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின் |
|
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த |
|
அணங்குடை வன முலைத் தாஅய நின் |
|
20 |
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார் | |
உரை |
மேல் |