செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார் |
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர் |
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை |
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப, |
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர, |
|
5 |
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட, |
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி, |
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன், |
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும் |
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்; அதற்கொண்டு |
|
10 |
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய், |
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி |
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி, |
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு |
|
துறையும் துஞ்சாது, கங்குலானே! |
|
தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் | |
உரை |
மேல் |