தாயங்கண்ணனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் |
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை |
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென |
|
நல் வரை நாடன் தற்பாராட்ட |
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து, |
|
5 |
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி, |
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள், |
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின் |
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம் மருண்டு, |
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச் |
|
10 |
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி |
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார், |
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து |
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் |
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து, |
|
15 |
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம் |
முகை தலை திறந்த வேனிற் |
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே? |
|
மகட் போக்கிய தாய் சொல்லியது. - தாயங்கண்ணனார் | |
உரை |
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து, |
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி |
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின், |
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி, |
|
5 |
வால் நிணப் புகவின், கானவர் தங்கை |
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் |
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின், |
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப! |
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக் |
|
10 |
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை |
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள் |
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை |
|
இருங் கவுட் கடாஅம் கனவும், |
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே. |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த |
|
நெடுஞ் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின், |
|
புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் |
|
பெருங் கை எண்கின் இருங் கிளை கவரும் |
|
5 |
அத்த நீள் இடைப் போகி, நன்றும் |
அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் |
|
வாரேன் வாழி, என் நெஞ்சே! சேரலர் |
|
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க, |
|
யவனர் தந்த வினை மாண் நன் கலம் |
|
10 |
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் |
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ, |
|
அருஞ் சமம் கடந்து, படிமம் வவ்விய |
|
நெடு நல் யானை அடுபோர்ச் செழியன் |
|
கொடி நுடங்கு மறுகின் கூடற் குடாஅது, |
|
15 |
பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய, |
ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து, |
|
வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து |
|
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் |
|
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே. |
|
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர் |
|
இன மழை தவழும் ஏற்று அரு நெடுங் கோட்டு |
|
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர், |
|
கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி |
|
5 |
சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி, |
இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெரு நிரை |
|
நனை முதிர் நறவின் நாட் பலி கொடுக்கும் |
|
வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து, |
|
நிழற் கவின் இழந்த நீர் இல் நீள் இடை |
|
10 |
அழல் அவிர் அருஞ் சுரம் நெடிய என்னாது, |
அகறல் ஆய்ந்தனர்ஆயினும், பகல் செலப் |
|
பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் |
|
பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து, |
|
எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் |
|
15 |
வெல்போர் வானவன் கொல்லிக் குட வரை |
வேய் ஒழுக்கு அன்ன, சாய் இறைப் பணைத் தோள் |
|
பெருங் கவின் சிதைய நீங்கி, ஆன்றோர் | |
அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும், |
|
சென்று, தாம் நீடலோஇலரே என்றும் |
|
20 |
கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை, |
வலம் படு வென்றி வாய் வாள், சோழர் |
|
இலங்கு நீர்க் காவிரி இழிபுனல் வரித்த |
|
அறல் என நெறிந்த கூந்தல், |
|
உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. - தாயங்கண்ணனார் | |
உரை |
'புன் காற் பாதிரி அரி நிறத் திரள் வீ |
|
நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப, |
|
அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் |
|
தேன் இமிர் நறுஞ் சினைத் தென்றல் போழ, |
|
5 |
குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து |
இன்னா கழியும் கங்குல்' என்று நின் |
|
நல் மா மேனி அணி நலம் புலம்ப, |
|
இனைதல் ஆன்றிசின் ஆயிழை! கனைதிறல் |
|
செந் தீ அணங்கிய செழு நிணக் கொழுங் குறை |
|
10 |
மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு, |
இருங் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் |
|
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு, |
|
பால் பெய் செந்நெற் பாசவல் பகுக்கும் |
|
புனல் பொரு புதவின், உறந்தை எய்தினும், |
|
15 |
வினை பொருளாகத் தவிரலர் கடை சிவந்து |
ஐய அமர்த்த உண்கண் நின் |
|
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. -தாயங்கண்ணனார் | |
உரை |
மணி வாய்க் காக்கை மா நிறப் பெருங் கிளை |
|
பிணி வீழ் ஆலத்து அலங்கு சினை ஏறி, |
|
கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் |
|
கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர் |
|
5 |
படு பிணம் கவரும் பாழ் படு நனந்தலை, |
அணங்கு என உருத்த நோக்கின், ஐயென |
|
நுணங்கிய நுசுப்பின், நுண் கேழ் மாமை, |
|
பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய |
|
நல் நிறத்து எழுந்த, சுணங்கு அணி வன முலை, |
|
10 |
சுரும்பு ஆர் கூந்தல், பெருந் தோள், இவள்வயின் |
பிரிந்தனிர் அகறல் சூழின், அரும் பொருள் |
|
எய்துகமாதோ நுமக்கே; கொய் தழைத் |
|
தளிர் ஏர் அன்ன, தாங்கு அரு மதுகையள், |
|
மெல்லியள், இளையள், நனி பேர் அன்பினள், |
|
15 |
'செல்வேம்' என்னும் நும் எதிர், |
'ஒழிவேம்' என்னும் ஒண்மையோ இலளே! |
|
செலவு உணர்த்திய தலைமகற்குத் தோழி செலவு அழுங்கச் சொல்லியது. -எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த |
|
வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த |
|
உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய, |
|
தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி, |
|
5 |
வியல் அறை சிவப்ப வாங்கி, முணங்கு நிமிர்ந்து, |
புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி |
|
பயில் இருங் கானத்து வழங்கல்செல்லாது, |
|
பெருங் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும், |
|
தீம் சுளைப் பலவின் தொழுதி, உம்பற் |
|
10 |
பெருங் காடு இறந்தனர்ஆயினும், யாழ நின் |
திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி, |
|
உள்ளாது அமைதலோ இலரே; நல்குவர் |
|
மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை |
|
அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் |
|
15 |
காலொடு துயல்வந்தன்ன, நின் |
ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே. |
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.-எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் | |
உரை |
மேல் |