நல் வெள்ளியார் |
நெருநல் எல்லை ஏனல் தோன்றி, |
|
திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து, |
|
புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள, |
|
இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி, |
|
5 |
சிறு தினைப் படு கிளி கடீஇயர், பல் மாண் |
குளிர் கொள் தட்டை மதன் இல புடையா, |
|
'சூரரமகளிரின் நின்ற நீ மற்று |
|
யாரையோ? எம் அணங்கியோய்! உண்கு' எனச் |
|
சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு |
|
10 |
இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர் உற்ற என் |
உள் அவன் அறிதல் அஞ்சி, உள் இல் |
|
கடிய கூறி, கை பிணி விடாஅ, |
|
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ, நின்ற |
|
என் உரத் தகைமையின் பெயர்த்து, பிறிது என்வயின் |
|
15 |
சொல்ல வல்லிற்றும்இலனே; அல்லாந்து, |
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் |
|
தோலாவாறு இல்லை தோழி! நாம் சென்மோ. |
|
சாய் இறைப் பணைத் தோட் கிழமை தனக்கே |
|
மாசு இன்றாதலும் அறியான், ஏசற்று, |
|
20 |
என் குறைப் புறனிலை முயலும் |
அண்கணாளனை நகுகம், யாமே. |
|
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது; தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉம் ஆம்.- நல்வெள்ளியார் | |
உரை |
மேல் |