நெய்தல் சாய்த்துய்த்த ஆவூர் கிழார் |
கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி |
|
சிதலை செய்த செந் நிலைப் புற்றின் |
|
மண் புனை நெடுங் கோடு உடைய வாங்கி, |
|
இரை நசைஇப் பரிக்கும் அரைநாட் கங்குல் |
|
5 |
ஈன்று அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி |
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் |
|
பனி இருஞ் சோலை, 'எமியம்' என்னாய், |
|
தீங்கு செய்தனையே, ஈங்கு வந்தோயே; |
|
நாள் இடைப்படின், என் தோழி வாழாள்; |
|
10 |
தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; |
கழியக் காதலர்ஆயினும், சான்றோர் |
|
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்; |
|
வரையின் எவனோ? வான் தோய் வெற்ப! |
|
கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் |
|
15 |
மணப்பு அருங் காமம் புணர்ந்தமை அறியார், |
தொன்று இயல் மரபின் மன்றல் அயர, |
|
பெண் கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி, |
|
நொதுமல் விருந்தினம் போல, இவள் |
|
புது நாண் ஒடுக்கமும் காண்குவம், யாமே. |
|
இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது. - நெய்தற்சாய்த்துய்த்த ஆவூர் கிழார் | |
உரை |
மேல் |