நொச்சி நியமங் கிழார் |
'வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல், |
|
கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் |
|
பொன் நேர் புது மலர் வேண்டிய குறமகள் |
|
இன்னா இசைய பூசல் பயிற்றலின், |
|
5 |
"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் |
ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது" எனத் தம் |
|
மலை கெழு சீறூர் புலம்ப, கல்லெனச் |
|
சிலையுடை இடத்தர் போதரும் நாடன் |
|
நெஞ்சு அமர் வியல் மார்பு உடைத்து என அன்னைக்கு |
|
10 |
அறிவிப்பேம்கொல்? அறியலெம்கொல்?' என |
இருபாற் பட்ட சூழ்ச்சி ஒருபால் |
|
சேர்ந்தன்று வாழி, தோழி! 'யாக்கை |
|
இன் உயிர் கழிவதுஆயினும், நின் மகள் |
|
ஆய்மலர் உண்கண் பசலை |
|
15 |
காம நோய்' எனச் செப்பாதீமே. |
தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்கு, தோழி,'அறத்தொடு நிற்றும்' என, தலைமகள் சொல்லியது. - நொச்சிநியமங் கிழார் | |
உரை |
மேல் |