பரணர் |
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை, |
|
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை, |
|
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை, |
|
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன், |
|
5 |
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் |
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம், |
|
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு, |
|
வேழ வெண் புணை தழீஇ, பூழியர் |
|
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு, |
|
10 |
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய, |
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து, |
|
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின், |
|
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என, |
|
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம் |
|
15 |
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல! |
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து, |
|
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி, |
|
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய், |
|
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும், |
|
20 |
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம் |
இளமை சென்று தவத் தொல்லஃதே; |
|
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே? |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர் | |
உரை |
அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன |
|
நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள், |
|
மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன |
|
5 |
மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு |
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி |
|
பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப, |
|
கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின், |
|
கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று |
|
10 |
நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, |
நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல் |
|
ஆகம் அடைதந்தோளே வென் வேற் |
|
களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி |
|
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக் |
|
15 |
கடவுள் எழுதிய பாவையின், |
மடவது மாண்ட மாஅயோளே. |
அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க, |
|
தண் துறை ஊரன் எம் சேரி வந்தென |
|
இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு |
|
நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை |
|
5 |
அவை புகு பொருநர் பறையின், ஆனாது, |
கழறுப என்ப, அவன் பெண்டிர்; 'அந்தில், |
|
கச்சினன், கழலினன், தேம் தார் மார்பினன், |
|
வகை அமைப் பொலிந்த, வனப்பு அமை, தெரியல், |
|
சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என, |
|
10 |
ஆதிமந்தி பேதுற்று இனைய, |
சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும் |
|
அம் தண் காவிரி போல, |
|
கொண்டு கை வலித்தல் சூழ்ந்திசின், யானே. |
'தலைமகனை நயப்பித்துக் கொண்டாள்' என்று கழறக் கேட்ட பரத்தை,தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - பரணர் | |
உரை |
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை |
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர் |
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின், |
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர! |
|
5 |
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப் |
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல், |
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல், |
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை, |
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை |
|
10 |
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே, |
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து |
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார், |
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன் |
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை, |
|
15 |
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் |
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி, |
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர் |
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை, |
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே. |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் |
|
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்; |
|
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின், |
|
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்; |
|
5 |
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், |
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்; |
|
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று |
|
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்; |
|
அர வாய் ஞமலி மகிழாது மடியின், |
|
10 |
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் |
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே; |
|
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின், |
|
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை |
|
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்; |
|
15 |
வளைக்கண் சேவல் வாளாது மடியின், |
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்; |
|
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள் |
|
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால், |
|
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து, |
|
20 |
ஆதி போகிய பாய்பரி நன் மா |
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் |
|
கல் முதிர் புறங்காட்டு அன்ன |
|
பல் முட்டின்றால் தோழி! நம் களவே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகன் சொற்றது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, |
|
நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி |
|
இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை |
|
ஆலி அன்ன வால் வீ தாஅய், |
|
5 |
வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, |
|
படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் |
|
கடாஅம் மாறிய யானை போல, |
|
பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ |
|
10 |
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் |
|
தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, |
|
முனிய அலைத்தி, முரண் இல் காலை; |
|
கைதொழு மரபின் கடவுள் சான்ற |
|
15 |
செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் |
|
வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த |
|
பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், |
|
சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற |
|
20 |
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
பீடு இல் மன்னர் போல, |
|
ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, |
|
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் |
|
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, |
|
எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, |
|
5 |
ஆதிமந்தியின் அறிவு பிறிதுஆகி, |
பேதுற்றிசினே காதல்அம் தோழி! |
|
காய்கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி, |
|
ஆடுதளிர் இருப்பைக் கூடு குவி வான் பூ, |
|
கோடு கடை கழங்கின், அறைமிசைத் தாஅம் |
|
10 |
காடு இறந்தனரே, காதலர்; அடுபோர், |
வீயா விழுப் புகழ், விண் தோய் வியன் குடை, |
|
ஈர் எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த |
|
கழுவுள் காமூர் போலக் |
|
கலங்கின்றுமாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொற்றது. - பரணர் | |
உரை |
இலமலர் அன்ன அம் செந் நாவின் |
|
புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த, |
|
பலர் மேந் தோன்றிய கவி கை வள்ளல் |
|
நிறைஅருந் தானை வெல்போர் மாந்தரம் |
|
5 |
பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற |
குறையோர் கொள்கலம் போல, நன்றும் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! காதலி |
|
முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற |
|
கறை அடி யானை நன்னன் பாழி, |
|
10 |
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க் |
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி |
|
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் |
|
வெள்ளத் தானை அதிகற் கொன்று, உவந்து |
|
ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின், |
|
15 |
பலர் அறிவுறுதல் அஞ்சி, பைப்பய, |
நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் |
|
சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கை |
|
குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல், |
|
இடன் இல் சிறு புறத்து இழையொடு துயல்வர, |
|
20 |
கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து, |
உருவு கிளர் ஓவினைப் பொலிந்த பாவை |
|
இயல் கற்றன்ன ஒதுக்கினள் வந்து, |
|
பெயல் அலைக் கலங்கிய மலைப் பூங் கோதை |
|
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப, |
|
25 |
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்; |
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே. |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
பனைத் திரள் அன்ன பரு ஏர் எறுழ்த் தடக் கை, |
|
கொலைச் சினம் தவிரா மதனுடை முன்பின், |
|
வண்டு படு கடாஅத்து, உயர் மருப்பு, யானை |
|
தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி; |
|
5 |
உறு புலி உரறக் குத்தி; விறல் கடிந்து; |
சிறு தினைப் பெரும் புனம் வவ்வும் நாட! |
|
கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் |
|
நெடுந் தேர் ஞிமிலியொடு பொருது, களம் பட்டென, |
|
காணிய செல்லாக் கூகை நாணி, |
|
10 |
கடும் பகல் வழங்காதாஅங்கு, இடும்பை |
பெரிதால் அம்ம இவட்கே; அதனால் |
|
மாலை, வருதல் வேண்டும் சோலை |
|
முளை மேய் பெருங் களிறு வழங்கும் |
|
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே. |
பகல் வருவானை 'இரவு வருக' என்றது. - பரணர் | |
உரை |
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து, |
|
குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் |
|
செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் |
|
நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசை, |
|
5 |
சினம் கெழு தானை, தித்தன் வெளியன், |
இரங்குநீர்ப் பரப்பின் கானல்அம் பெருந் துறை, |
|
தனம் தரு நன் கலம் சிதையத் தாக்கும் |
|
சிறு வெள் இறவின் குப்பை அன்ன |
|
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் |
|
10 |
முனை முரண் உடையக் கடந்த வென் வேல், |
இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ், |
|
பாரத்துத் தலைவன், ஆர நன்னன்; |
|
ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் |
|
களி மயிற் கலாவத்தன்ன. தோளே |
|
15 |
வல் வில் இளையர் பெருமகன்; நள்ளி |
சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த |
|
கடவுட் காந்தளுள்ளும், பல உடன் |
|
இறும்பூது கஞலிய ஆய்மலர் நாறி, |
|
வல்லினும், வல்லார்ஆயினும், சென்றோர்க்குச் |
|
20 |
சால் அவிழ் நெடுங் குழி நிறைய வீசும், |
மாஅல் யானை ஆஅய் கானத்துத் |
|
தலையாற்று நிலைஇய சேயுயர் பிறங்கல் |
|
வேய் அமைக் கண் இடை புரைஇ, |
|
சேய ஆயினும், நடுங்கு துயர் தருமே. |
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பரணர் | |
உரை |
கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து |
|
அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, |
|
கடல் கண்டன்ன மாக விசும்பின் |
|
அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, |
|
5 |
கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, |
விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், |
|
அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, |
|
பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை |
|
நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; |
|
10 |
அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என |
வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், |
|
முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், |
|
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், |
|
கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, |
|
15 |
கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, |
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி |
|
நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய |
|
நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் |
|
கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் |
|
20 |
வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, |
வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் |
|
களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர |
|
ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, |
|
நேர் கொள் நெடு வரைக் கவாஅன் |
|
25 |
சூரரமகளிரின் பெறற்கு அரியோளே. |
இரவுக் குறிக்கண் தலைமகளைத் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
வயிரத்தன்ன வை ஏந்து மருப்பின், |
|
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி |
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி, |
|
நீலத்தன்ன அகல் இலைச் சேம்பின் |
|
5 |
பிண்டம் அன்ன கொழுங் கிழங்கு மாந்தி, |
பிடி மடிந்தன்ன கல் மிசை ஊழ் இழிபு, |
|
யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் |
|
பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன, |
|
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து |
|
10 |
அலங்கு குலை அலரி தீண்டி, தாது உக, |
பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர, |
|
கிளை அமல் சிறு தினை விளை குரல் மேய்ந்து, |
|
கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு |
|
உணர்ந்தனை புணர்ந்த நீயும், நின் தோட் |
|
15 |
பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து, என்றும், |
தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி |
|
'எல்லையும் இரவும் என்னாது, கல்லெனக் |
|
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறைத் |
|
தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது' என, |
|
20 |
கனவினும் பிரிவு அறியலனே; அதன்தலை |
முன் தான் கண்ட ஞான்றினு ம் |
|
பின் பெரிது அளிக்கும், தன் பண்பினானே. |
தோழி வரைவு மலிந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
துன் அருங் கானமும் துணிதல் ஆற்றாய், |
|
பின் நின்று பெயரச் சூழ்ந்தனைஆயின், |
|
என் நிலை உரைமோ நெஞ்சே! ஒன்னார் |
|
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெருந் தானை |
|
5 |
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ, |
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப, |
|
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று |
|
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு |
|
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந் தோடு |
|
10 |
விசும்பிடை தூர ஆடி, மொசிந்து உடன், |
பூ விரி அகன் துறைக் கணை விசைக் கடு நீர்க் |
|
காவிரிப் பேர் யாற்று அயிர் கொண்டு ஈண்டி, |
|
எக்கர் இட்ட குப்பை வெண் மணல் |
|
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் |
|
15 |
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை, |
நான் மறை முது நூல் முக்கட் செல்வன், |
|
ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய |
|
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் |
|
கைசெய் பாவைத் துறைக்கண் இறுக்கும் |
|
20 |
மகர நெற்றி வான் தோய் புரிசைச் |
சிகரம் தோன்றாச் சேண் உயர் நல் இல் |
|
புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் |
|
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால், |
|
பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள், |
|
25 |
அணங்குசால், அரிவை இருந்த |
மணம் கமழ் மறுகின் மணற் பெருங் குன்றே. |
இடைச் சுரத்து ஒழியக் கருதிய நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை |
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் |
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை |
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை |
|
5 |
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும் |
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு |
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே, |
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப் |
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே, |
|
10 |
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட, |
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப, |
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து, |
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள் |
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல், |
|
15 |
மாரி அம்பின், மழைத்தோற் பழையன் |
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என் |
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின் |
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர் |
|
திரு நுதல் பசப்ப நீங்கும் |
|
20 |
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே. |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி நெருங்கியது. -பரணர் | |
உரை |
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து, |
|
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் |
|
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி, |
|
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி |
|
5 |
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு |
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, |
|
விடியல் வைகறை இடூஉம் ஊர! |
|
தொடுகலம்; குறுக வாரல் தந்தை |
|
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, |
|
10 |
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, |
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை |
|
அன்னிமிஞிலியின் இயலும் |
|
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே. |
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர் | |
உரை |
'கூறுவம்கொல்லோ? கூறலம்கொல்?' எனக் |
|
கரந்த காமம் கைந்நிறுக்கல்லாது, |
|
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி, |
|
அரை நாள் யாமத்து விழு மழை கரந்து; |
|
5 |
கார் விரை கமழும் கூந்தல், தூ வினை |
நுண் நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் |
|
இள மழை சூழ்ந்த மட மயில் போல, |
|
வண்டு வழிப் படர, தண் மலர் வேய்ந்து, |
|
வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் |
|
10 |
அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, |
துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், |
|
ஆன்ற கற்பின் சான்ற பெரியள், |
|
அம் மா அரிவையோ அல்லள்; தெனாஅது |
|
ஆஅய் நல் நாட்டு அணங்குடைச் சிலம்பில், |
|
15 |
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன், |
ஏர் மலர் நிறை சுனை உறையும் |
|
சூர்மகள்மாதோ என்னும் என் நெஞ்சே! |
புணர்ந்து நீங்கிய தலைமகளது போக்கு நோக்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
யாம இரவின் நெடுங் கடை நின்று, |
|
தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் |
|
நுண் கோல் அகவுநர் வேண்டின், வெண் கோட்டு |
|
அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் |
|
5 |
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், |
அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை, |
|
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு |
|
நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து, |
|
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்தென, 'புள் ஒருங்கு |
|
10 |
அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று |
ஒண் கதிர் தெறாமை, சிறகரின் கோலி, |
|
நிழல் செய்து உழறல் காணேன், யான்' எனப் |
|
படுகளம் காண்டல்செல்லான், சினம் சிறந்து, |
|
உரு வினை நன்னன், அருளான், கரப்ப, |
|
15 |
பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் |
குரூஉப் பூம் பைந் தார் அருக்கிய பூசல், |
|
வசை விடக் கடக்கும் வயங்கு பெருந் தானை |
|
அகுதை கிளைதந்தாங்கு, மிகு பெயல் |
|
உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல, |
|
20 |
நாணு வரை நில்லாக் காமம் நண்ணி, |
நல்கினள், வாழியர், வந்தே ஓரி |
|
பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் |
|
கார் மலர் கடுப்ப நாறும், |
|
ஏர் நுண், ஓதி மாஅயோளே! |
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
தா இல் நல் பொன் தைஇய பாவை |
|
விண் தவழ் இள வெயிற் கொண்டு நின்றன்ன, |
|
மிகு கவின் எய்திய, தொகுகுரல் ஐம்பால், |
|
கிளைஅரில் நாணற் கிழங்கு மணற்கு ஈன்ற |
|
5 |
முளை ஓரன்ன முள் எயிற்றுத் துவர் வாய், |
நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் |
|
இசை ஓர்த்தன்ன இன் தீம் கிளவி, |
|
அணங்கு சால் அரிவையை நசைஇ, பெருங் களிற்று |
|
இனம் படி நீரின் கலங்கிய பொழுதில், |
|
10 |
பெறல் அருங் குரையள் என்னாய், வைகலும், |
இன்னா அருஞ் சுரம் நீந்தி, நீயே |
|
என்னை இன்னற் படுத்தனை; மின்னு வசிபு |
|
உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று, |
|
விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ, |
|
15 |
படை நிலா இலங்கும் கடல் மருள் தானை |
மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் |
|
பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து, |
|
செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி, |
|
ஓங்குதிரைப் பௌவம் நீங்க ஓட்டிய |
|
20 |
நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் |
கூர் மதன் அழியரோ நெஞ்சே! ஆனாது |
|
எளியள் அல்லோட் கருதி, |
|
விளியா எவ்வம் தலைத் தந்தோயே. |
அல்லகுறிப்பட்டு நீங்கும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது. -பரணர் | |
உரை |
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் |
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என் |
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்; |
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண், |
|
5 |
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும், |
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின், |
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ, |
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின், |
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த |
|
10 |
ஆதிமந்தி காதலற் காட்டி, |
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின் |
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர், |
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள், |
|
உரவு உரும் ஏறொடு மயங்கி, |
|
15 |
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
உணர்குவென்அல்லென்; உரையல் நின் மாயம்; |
|
நாண் இலை மன்ற யாணர் ஊர! |
|
அகலுள் ஆங்கண், அம் பகை மடிவை, |
|
குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின், |
|
5 |
பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக் |
கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும், |
|
வல் வில் எறுழ்த் தோள், பரதவர் கோமான், |
|
பல் வேல் மத்தி, கழாஅர் முன்துறை, |
|
நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய, |
|
10 |
விடியல் வந்த பெரு நீர்க் காவிரி, |
தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு |
|
முன் நாள் ஆடிய கவ்வை, இந் நாள், |
|
வலி மிகும் முன்பின் பாணனொடு, மலி தார்த் |
|
தித்தன் வெளியன் உறந்தை நாள் அவைப் |
|
15 |
பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி, |
போர் அடு தானைக் கட்டி |
|
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே. |
தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மணி மருள் மலர முள்ளி அமன்ற, |
|
துணி நீர், இலஞ்சிக் கொண்ட பெரு மீன் |
|
அரி நிறக் கொழுங் குறை வௌவினர் மாந்தி, |
|
வெண்ணெல் அரிநர் பெயர்நிலைப் பின்றை, |
|
5 |
இடை நிலம் நெரிதரு நெடுங் கதிர்ப் பல் சூட்டுப் |
பனி படு சாய்ப் புறம் பரிப்ப, கழனிக் |
|
கருங் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ |
|
மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் |
|
காமம் பெருமை அறியேன், நன்றும் |
|
10 |
உய்ந்தனென் வாழி, தோழி! அல்கல் |
அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்ப, |
|
கொடுங் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை |
|
அறியாமையின் அழிந்த நெஞ்சின், |
|
'ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின், |
|
15 |
தோட்டு இருஞ் சுரியல் மணந்த பித்தை, |
ஆட்டன் அத்தியைக் காணீரோ?' என |
|
நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின், |
|
'கடல் கொண்டன்று' என, 'புனல் ஒளித்தன்று' என, |
|
கலுழ்ந்த கண்ணள், காதலற் கெடுத்த |
|
20 |
ஆதிமந்தி போல, |
ஏதம் சொல்லி, பேது பெரிது உறலே. |
ஆற்றாமை வாயிலாகப் புக்க தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பரணர் | |
உரை |
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை |
|
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக, |
|
நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் |
|
மலி நீர் அகல் வயல் யாணர் ஊர! |
|
5 |
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு |
தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு |
|
ஆடினை என்ப, நெருநை; அலரே |
|
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் |
|
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், |
|
10 |
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் |
இமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய, |
|
பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, |
|
மொய் வலி அறுத்த ஞான்றை, |
|
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே. |
தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, |
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த |
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் |
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் |
|
5 |
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் |
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து |
|
மாய இருள் அளை மாய் கல் போல, |
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும், |
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ, |
|
10 |
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி, |
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப் |
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து |
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக, |
|
காமம் கைம்மிக உறுதர, |
|
15 |
ஆனா அரு படர் தலைத்தந்தோயே! |
அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. -பரணர் | |
உரை |
முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி, |
|
பகடு பல பூண்ட உழவுறு செஞ் செய், |
|
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து, |
|
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கென, |
|
5 |
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது, |
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின், |
|
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள், |
|
சினத்தின் கொண்ட படிவம் மாறாள், |
|
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன், |
|
10 |
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர் |
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய |
|
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து, |
|
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
15 |
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும் |
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் |
|
கொண்டல் மா மலை நாறி, |
|
அம் தீம் கிளவி வந்தமாறே. |
இரவுக்குறிக்கண் தலைமகளைப் புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
கோடுற நிவந்த நீடு இரும் பரப்பின் |
|
அந்திப் பராஅய புதுப் புனல், நெருநை, |
|
மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ, |
|
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல் |
|
5 |
இளந் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ, |
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் |
|
நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலையாகி, |
|
காமம் கைம்மிகச் சிறத்தலின், நாண் இழந்து, |
|
ஆடினை என்ப மகிழ்ந! அதுவே |
|
10 |
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் |
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் |
|
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் |
|
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், |
|
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, |
|
15 |
கவ்வை ஆகின்றால் பெரிதே; இனி அஃது |
அவலம் அன்றுமன், எமக்கே; அயல |
|
கழனி உழவர் கலி சிறந்து எடுத்த |
|
கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை |
|
அணங்குடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் |
|
20 |
திரு மணி விளக்கின் அலைவாய்ச் |
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே! |
பரத்தையிற் பிரிந்து வந்து கூடிய தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. -பரணர் | |
உரை |
நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த |
|
வாளை வெண் போத்து உணீஇய, நாரை தன் |
|
அடி அறிவுறுதல் அஞ்சி, பைபயக் |
|
கடி இலம் புகூஉம் கள்வன் போல, |
|
5 |
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு |
ஆவது ஆக! இனி நாண் உண்டோ? |
|
வருகதில் அம்ம, எம் சேரி சேர! |
|
அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண, |
|
தாரும் தானையும் பற்றி, ஆரியர் |
|
10 |
பிடி பயின்று தரூஉம் பெருங் களிறு போல, |
தோள் கந்தாகக் கூந்தலின் பிணித்து, அவன் |
|
மார்பு கடி கொள்ளேன்ஆயின், ஆர்வுற்று |
|
இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல், |
|
பரந்து வெளிப்படாது ஆகி, |
|
15 |
வருந்துகதில்ல, யாய் ஓம்பிய நலனே! |
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - பரணர் | |
உரை |
வயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு, |
|
மயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்; |
|
ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப, |
|
இறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர, |
|
5 |
பாம்பு எறி கோலின் தமியை வைகி, |
தேம்புதிகொல்லோ? நெஞ்சே! உரும் இசைக் |
|
களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின், |
|
ஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன் |
|
வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், |
|
10 |
பிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக் |
குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல், |
|
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப |
|
முயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை, |
|
புகல் அரும், பொதியில் போலப் |
|
15 |
பெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே! |
அல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
ஊரல் அவ் வாய் உருத்த தித்தி, |
|
பேர் அமர் மழைக் கண், பெருந் தோள், சிறு நுதல், |
|
நல்லள் அம்ம, குறுமகள் செல்வர் |
|
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண், |
|
5 |
நெடுங் கொடி நுடங்கும் மட்ட வாயில், |
இருங் கதிர்க் கழனிப் பெருங் கவின் அன்ன |
|
நலம் பாராட்டி, நடை எழில் பொலிந்து, |
|
விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் |
|
இழை அணி யானைச் சோழர் மறவன் |
|
10 |
கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை, |
புனல் மலி புதவின், போஒர் கிழவோன், |
|
பழையன் ஓக்கிய வேல் போல், |
|
பிழையல கண், அவள் நோக்கியோர் திறத்தே! |
தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர் | |
உரை |
மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை |
|
உகு வார் அருந்த, பகு வாய் யாமை |
|
கம்புள் இயவன் ஆக, விசி பிணித் |
|
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் |
|
5 |
இடை நெடுந் தெருவில் கதுமெனக் கண்டு, என் |
பொற் தொடி முன்கை பற்றினனாக, |
|
'அன்னாய்!' என்றனென்; அவன் கை விட்டனனே, |
|
தொல் நசை சாலாமை, நன்னன் பறம்பில் |
|
சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய |
|
10 |
கற் போல் நாவினேனாகி, மற்று அது |
செப்பலென் மன்னால், யாய்க்கே; நல் தேர்க் |
|
கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் |
|
நெடுங் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் |
|
நல்லடி உள்ளானாகவும், ஒல்லார் |
|
15 |
கதவம் முயறலும் முயல்ப; அதாஅன்று, |
ஒலி பல் கூந்தல் நம்வயின் அருளாது, |
|
கொன்றனன்ஆயினும் கொலை பழுது அன்றே |
|
அருவி ஆம்பல் கலித்த முன்துறை |
|
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன |
|
20 |
மின் ஈர் ஓதி! என்னை, நின் குறிப்பே? |
பின்னின்ற தலைமகற்குக் குறை நேர்ந்த தோழி தலைமகளைக் குறை நயப்பக் கூறியது.-பரணர் | |
உரை |
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து, |
|
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து, |
|
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப, |
|
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய, |
|
5 |
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர், |
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின் |
|
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை, |
|
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை |
|
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர், |
|
10 |
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின், |
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன |
|
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் |
|
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம |
|
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும் |
|
15 |
உயிர் குழைப்பன்ன சாயல், |
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே. |
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
அருந் தெறல் மரபின் கடவுள் காப்ப, |
|
பெருந் தேன் தூங்கும் நாடு காண் நனந்தலை, |
|
அணங்குடை வரைப்பின், பாழி ஆங்கண், |
|
வேள் முது மாக்கள் வியல் நகர்க் கரந்த |
|
5 |
அருங் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து, |
வருந்தினம்மாதோ எனினும், அஃது ஒல்லாய், |
|
இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல், |
|
ஊர்ந்து இழி கயிற்றின், செல வர வருந்தி, |
|
நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி |
|
10 |
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் |
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும், |
|
பெருந் துடி வள்பின் வீங்குபு நெகிழா, |
|
மேய் மணி இழந்த பாம்பின், நீ நனி |
|
தேம்பினை வாழி, என் நெஞ்சே! வேந்தர் |
|
15 |
கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து, |
ஈண்டு அருங்குரையள், நம் அணங்கியோளே. |
அல்லகுறிப்பட்டுப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
செல்லல், மகிழ்ந! நிற் செய் கடன் உடையென்மன் |
|
கல்லா யானை கடி புனல் கற்றென, |
|
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை, |
|
ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, |
|
5 |
கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, |
தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை |
|
ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, |
|
கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, |
|
இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, |
|
10 |
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, |
காவிரி கொண்டு ஒளித்தாங்கும் அன்னோ! |
|
நும்வயின் புலத்தல் செல்லேம்; எம்வயின் |
|
பசந்தன்று, காண்டிசின் நுதலே; அசும்பின் |
|
அம் தூம்பு வள்ளை அழற் கொடி மயக்கி, |
|
15 |
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய, |
துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும், பொற்புடைக் |
|
குரங்குஉளைப் புரவிக் குட்டுவன் |
|
மரந்தை அன்ன, என் நலம் தந்து சென்மே! |
காதற்பரத்தை புலந்து சொல்லியது. - பரணர் | |
உரை |
பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து |
|
வாளை நாள் இரை தேரும் ஊர! |
|
நாணினென், பெரும! யானே பாணன் |
|
மல் அடு மார்பின் வலி உற வருந்தி, |
|
5 |
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் |
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த |
|
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க் |
|
கணையன் நாணியாங்கு மறையினள் |
|
மெல்ல வந்து, நல்ல கூறி, |
|
10 |
'மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் |
சேரியேனே; அயல் இலாட்டியேன்; |
|
நுங்கை ஆகுவென் நினக்கு' என, தன் கைத் |
|
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர, |
|
நுதலும் கூந்தலும் நீவி, |
|
15 |
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. |
தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம். - பரணர் | |
உரை |
தொடுத்தேன், மகிழ்ந! செல்லல் கொடித் தேர்ப் |
|
பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்தென, |
|
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண், |
|
'அஞ்சல்' என்ற ஆஅய் எயினன் |
|
5 |
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி, |
தன் உயிர் கொடுத்தனன், சொல்லியது அமையாது; |
|
தெறல் அருங் கடவுள் முன்னர்த் தேற்றி, |
|
மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து, |
|
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப, நின் |
|
10 |
மார்பு தருகல்லாய்; பிறன் ஆயினையே; |
இனி யான் விடுக்குவென் அல்லென்; மந்தி, |
|
பனி வார் கண்ணள், பல புலந்து உறைய, |
|
அடுந் திறல் அத்தி ஆடு அணி நசைஇ, |
|
நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்தாங்கு, நின் |
|
15 |
மனையோள் வவ்வலும் அஞ்சுவல்; சினைஇ, |
ஆரியர் அலறத் தாக்கி, பேர் இசைத் |
|
தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து, |
|
வெஞ் சின வேந்தரைப் பிணித்தோன் |
|
வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே! |
காதற்பரத்தை தலைமகற்குச் சொல்லியது. - பரணர் | |
உரை |
மேல் |