பெருங்குன்றூர் கிழார் |
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த |
|
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை |
|
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின், |
|
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும், |
|
5 |
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய |
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை |
|
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் |
|
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு |
|
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில், |
|
10 |
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய, |
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் |
|
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு, |
|
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது, |
|
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல, |
|
15 |
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால் |
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ, |
|
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம், |
|
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே. |
|
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார். | |
உரை |
மேல் |