மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் |
வினை நன்றாதல் வெறுப்பக் காட்டி, |
|
"மனை மாண் கற்பின் வாணுதல் ஒழிய, |
|
கவை முறி இழந்த செந் நிலை யாஅத்து |
|
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த, வன் பறை, |
|
5 |
வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் |
வளை வாய்ப் பேடை வரு திறம் பயிரும் |
|
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் |
|
செலவு அருங்குரைய என்னாது, சென்று, அவள் |
|
மலர் பாடு ஆன்ற, மை எழில், மழைக் கண் |
|
10 |
தெளியா நோக்கம் உள்ளினை, உளி வாய் |
வெம் பரல் அதர குன்று பல நீந்தி, |
|
யாமே எமியம் ஆக, நீயே |
|
ஒழியச் சூழ்ந்தனைஆயின் முனாஅது |
|
வெல் போர் வானவன் கொல்லி மீமிசை, |
|
15 |
நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள், |
வரி அணி அல்குல், வால் எயிற்றோள்வயின் |
|
பிரியாய்ஆயின் நன்றுமன் தில்ல. |
|
அன்று நம் அறியாய்ஆயினும், இன்று நம் |
|
செய்வினை ஆற்றுற விலங்கின், |
|
20 |
எய்துவைஅல்லையோ, பிறர் நகு பொருளே? |
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
''வருதும்'' என்ற நாளும் பொய்த்தன; |
|
அரி ஏர் உண்கண் நீரும் நில்லா; |
|
தண் கார்க்கு ஈன்ற பைங் கொடி முல்லை |
|
வை வாய் வால் முகை அவிழ்ந்த கோதை |
|
5 |
பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார், |
அருள் கண்மாறலோ மாறுக அந்தில் |
|
அறன் அஞ்சலரே! ஆயிழை! நமர்' எனச் |
|
சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும், |
|
பனி படு நறுந் தார் குழைய, நம்மொடு, |
|
10 |
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல |
உவக்குநள் வாழிய, நெஞ்சே! விசும்பின் |
|
ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் |
|
கடாஅ யானை கொட்கும் பாசறை, |
|
போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை |
|
15 |
கூர் வாட் குவிமுகம் சிதைய நூறி, |
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி |
|
வான மீனின் வயின் வயின் இமைப்ப, |
|
அமர் ஓர்த்து, அட்ட செல்வம் |
|
தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே. |
|
வினை முற்றிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் உரைப்பானாய், பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் | |
உரை |
'இரு பெரு வேந்தர் மாறு கொள் வியன் களத்து, |
|
ஒரு படை கொண்டு, வருபடை பெயர்க்கும் |
|
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல்' என, |
|
பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் |
|
5 |
செல்வேம்ஆதல் அறியாள், முல்லை |
நேர் கால் முது கொடி குழைப்ப, நீர் சொரிந்து, |
|
காலை வானத்துக் கடுங் குரற் கொண்மூ |
|
முழங்குதொறும் கையற்று, ஒடுங்கி, நப் புலந்து, |
|
பழங்கண் கொண்ட பசலை மேனியள், |
|
10 |
யாங்கு ஆகுவள்கொல் தானே வேங்கை |
ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள, |
|
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள், |
|
நல் மணல் வியலிடை நடந்த |
|
சில் மெல் ஒதுக்கின், மாஅயோளே? |
|
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
'''பசை படு பச்சை நெய் தோய்த்தன்ன |
|
சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை |
|
பகல் உறை முது மரம் புலம்பப் போகி, |
|
முகை வாய் திறந்த நகை வாய் முல்லை |
|
5 |
கடிமகள் கதுப்பின் நாறி, கொடிமிசை |
வண்டினம் தவிர்க்கும் தண் பதக் காலை |
|
வரினும், வாரார்ஆயினும், ஆண்டு அவர்க்கு |
|
இனிதுகொல், வாழி தோழி?'' என, தன் |
|
பல் இதழ் மழைக் கண் நல்லகம் சிவப்ப, |
|
10 |
அருந் துயர் உடையள் இவள்' என விரும்பிப் |
பாணன் வந்தனன், தூதே; நீயும் |
|
புல் ஆர் புரவி, வல் விரைந்து, பூட்டி, |
|
நெடுந் தேர் ஊர்மதி, வலவ! |
|
முடிந்தன்று அம்ம, நாம் முன்னிய வினையே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை.......மள்ளனார் | |
உரை |
'நீலத்து அன்ன நீர் பொதி கருவின், |
|
மா விசும்பு அதிர முழங்கி, ஆலியின் |
|
நிலம் தண்ணென்று கானம் குழைப்ப, |
|
இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப, |
|
5 |
மறியுடை மடப் பிணை தழீஇ, புறவின் |
திரிமருப்பு இரலை பைம் பயிர் உகள, |
|
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை, |
|
நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவி |
|
கல்லெனக் கறங்கு மணி இயம்ப, வல்லோன் |
|
10 |
வாச் செல வணக்கிய தாப் பரி நெடுந் தேர் |
ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்ப, தீம் தொடைப் |
|
பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப, |
|
இந் நிலை வாரார்ஆயின், தம் நிலை |
|
எவன்கொல்? பாண! உரைத்திசின், சிறிது' என, |
|
15 |
கடவுட் கற்பின் மடவோள் கூற, |
செய் வினை அழிந்த மையல் நெஞ்சின் |
|
துனி கொள் பருவரல் தீர, வந்தோய்! |
|
இனிது செய்தனையால்; வாழ்க, நின் கண்ணி! |
|
வேலி சுற்றிய வால் வீ முல்லைப் |
|
20 |
பெருந் தார் கமழும், விருந்து ஒலி, கதுப்பின் |
இன் நகை இளையோள் கவவ, |
|
மன்னுக, பெரும! நின் மலர்ந்த மார்பே! |
|
வினை முற்றிப் புகுந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் | |
உரை |
வள மழை பொழிந்த வால் நிறக் களரி, |
|
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத் |
|
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின், |
|
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர் |
|
5 |
கை மாண் தோணி கடுப்ப, பையென, |
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம் |
|
எல் இடை உறாஅ அளவை, வல்லே, |
|
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க, |
|
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி |
|
10 |
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, |
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ! |
|
பயப்புறு படர் அட வருந்திய |
|
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே! |
|
வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
ஆள்வினைப் பிரிதலும் உண்டோ? பிரியினும், |
|
கேள், இனி வாழிய, நெஞ்சே! நாளும் |
|
கனவுக் கழிந்தனையவாகி, நனவின், |
|
நாளது செலவும், மூப்பினது வரவும், |
|
5 |
அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும், |
இந் நிலை அறியாய்ஆயினும், செந் நிலை |
|
அமை ஆடு அம் கழை தீண்டி, கல்லென |
|
ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை |
|
நெடு வெண் களரி நீறு முகந்து சுழல, |
|
10 |
கடு வெயில் திருகிய வேனில் வெங் காட்டு, |
உயங்கு நடை மடப் பிணை தழீஇய, வயங்கு பொறி, |
|
அறு கோட்டு, எழிற் கலை அறுகயம் நோக்கி, |
|
தெண் நீர் வேட்ட சிறுமையின், தழை மறந்து, |
|
உண்நீர் இன்மையின், ஒல்குவன தளர, |
|
15 |
மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து, |
உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய |
|
விருந்து ஒழிவு அறியாப் பெருந் தண் பந்தர், |
|
வருந்தி வருநர் ஓம்பி, தண்ணெனத் |
|
தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் |
|
20 |
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி, |
மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை, |
|
நம்மொடு நன் மொழி நவிலும் |
|
பொம்மல் ஓதிப் புனையிழை குணனே? |
|
முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பொருள் முற்றி வந்திருந்த காலத்து, மீண்டும் பொருள் கடாவின நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் | |
உரை |
மேல் |