மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் |
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் |
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி |
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக் |
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும் |
|
5 |
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்; |
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன் |
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல் தெரிந்து, |
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி, |
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன் |
|
10 |
புல் வேய் குரம்பை புலர ஊன்றி, |
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில், |
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி சிறந்து, |
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் |
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல் |
|
15 |
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின் |
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள் |
|
மணி ஏர் மாண் நலம் சிதைய, |
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே! |
|
தோழி தலைமகளை இடத்து உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் | |
உரை |
மேல் |