மதுரைப் பேராலவாயார் |
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம், |
|
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும் |
|
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை, |
|
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி, |
|
5 |
குடுமி நெற்றி நெடு மரச் சேவல் |
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது, |
|
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் |
|
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி, |
|
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென, |
|
10 |
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம், |
நனி நீடு உழந்தனைமன்னே! அதனால் |
|
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற |
|
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் |
|
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி, |
|
15 |
தாழ் இருங் கூந்தல் நம் காதலி |
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- மதுரைப் பேராலவாயார் | |
உரை |
கோதை இணர, குறுங் கால், காஞ்சிப் |
|
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல், |
|
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு |
|
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும் |
|
5 |
பெரு நீர் வையை அவளொடு ஆடி, |
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின் |
|
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில் |
|
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி |
|
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் |
|
10 |
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் |
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன், |
|
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய |
|
மலிதரு கம்பலை போல, |
|
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே. |
|
வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது. -மதுரைப் பேராலவாயார் | |
உரை |
மேல் |