மதுரை மருதங் கிழார் மகனார் பெருங் கண்ணனார் |
மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை |
|
நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் |
|
அருள் இலர் வாழி, தோழி! பொருள் புரிந்து, |
|
இருங் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை, |
|
5 |
கருங் கோட்டு இருப்பை வெண் பூ முனையின், |
பெருஞ் செம் புற்றின் இருந் தலை இடக்கும் |
|
அரிய கானம் என்னார், பகை பட |
|
முனை பாழ்பட்ட ஆங்கண், ஆள் பார்த்துக் |
|
கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் |
|
10 |
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி, |
படு முடை நசைஇய பறை நெடுங் கழுத்தின் |
|
பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் |
|
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே. |
|
தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,வேறுபட்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரை மருதங் கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
மாதிரம் புதையப் பாஅய், கால் வீழ்த்து, |
|
ஏறுடைப் பெரு மழை பொழிந்தென, அவல்தோறு |
|
ஆடு களப் பறையின் வரி நுணல் கறங்க, |
|
ஆய் பொன் அவிர் இழை தூக்கியன்ன |
|
5 |
நீடு இணர்க் கொன்றை கவின் பெற, காடு உடன் |
சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ, |
|
முல்லை இல்லமொடு மலர, கல்ல |
|
பகு வாய்ப் பைஞ் சுனை மா உண மலிர, |
|
கார் தொடங்கின்றே காலை; காதலர் |
|
10 |
வெஞ் சின வேந்தன் வியன் பெரும் பாசறை, |
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்; |
|
யாது செய்வாம்கொல்? தோழி! நோதகக் |
|
கொலை குறித்தன்ன மாலை |
|
துனைதரு போழ்தின், நீந்தலோ அரிதே! |
|
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் | |
உரை |
மேல் |