பாடினோர் பகுதி

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்

377. பாலை
கோடை நீடலின், வாடு புலத்து உக்க
சிறு புல் உணவு, நெறி பட மறுகி,
நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த
வித்தா வல்சி, வீங்கு சிலை, மறவர்
5
பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர,
கொழுங் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து,
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி,
கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய,
வரி நிறச் சிதலை அரித்தலின், புல்லென்று,
10
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில்
இன்னா ஒரு சிறைத் தங்கி, இன் நகைச்
சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி,
வம்பலர் ஆகியும் கழிப மன்ற
நசை தர வந்தோர் இரந்தவை
15
இசை படப் பெய்தல் ஆற்றுவோரே!

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்