விற்றூற்று மூதெயினனார் |
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக் |
|
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் |
|
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள், |
|
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப, |
|
5 |
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி, |
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை |
|
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் |
|
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து, |
|
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை |
|
10 |
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை, |
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர, |
|
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக் |
|
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை |
|
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய |
|
15 |
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல, |
மருதமர நிழல், எருதொடு வதியும் |
|
காமர் வேனில்மன் இது, |
|
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே! |
|
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு |
|
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, |
|
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி |
|
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் |
|
5 |
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து, |
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி, |
|
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ, |
|
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, |
|
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, |
|
10 |
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை, |
பழங் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் |
|
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற |
|
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத் |
|
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி, |
|
15 |
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி, |
மழை பட்டன்ன மணல் மலி பந்தர், |
|
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி, |
|
தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின், |
|
'உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி! |
|
20 |
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, |
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறி வியர் |
|
உறு வளி ஆற்றச் சிறு வரை திற' என |
|
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், |
|
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப, |
|
25 |
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென |
நாணினள் இறைஞ்சியோளே பேணி, |
|
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி, |
|
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த |
|
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே. |
|
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.- விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
சென்மதி; சிறக்க, நின் உள்ளம்! நின் மலை |
|
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை, |
|
சாரல் வேங்கைப் படு சினைப் புதுப் பூ |
|
முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை, |
|
5 |
எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல், |
எவ்வம் கூரிய, வைகலும் வருவோய்! |
|
கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின், |
|
எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் |
|
கொடியோர் குறுகும் நெடி இருங் குன்றத்து, |
|
10 |
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி |
அரு வரை இழிதரும் வெரு வரு படாஅர்க் |
|
கயந் தலை மந்தி உயங்கு பசி களைஇயர், |
|
பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும், |
|
நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து, |
|
15 |
மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் |
கொந்தொடு உதிர்த்த கதுப்பின், |
|
அம் தீம் கிளவித் தந்தை காப்பே. |
|
பகற்குறிக்கண் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது. - விற்றூற்று மூதெயினனார் | |
உரை |
மேல் |