வீரை வெளியன் தித்தனார் |
பெருங் கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ! |
|
இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇ, |
|
போர்ப்பு உறு முரசின் இரங்கி, முறை புரிந்து |
|
அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் |
|
5 |
அருஞ் சமத்து எதிர்ந்த பெருஞ் செய் ஆடவர் |
கழித்து எறி வாளின், நளிப்பன விளங்கும் |
|
மின்னுடைக் கருவியை ஆகி, நாளும் |
|
கொன்னே செய்தியோ, அரவம்? பொன் என |
|
மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சி, |
|
10 |
பொலிந்த ஆயமொடு காண்தக இயலி, |
தழலை வாங்கியும், தட்டை ஓப்பியும், |
|
அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும், |
|
குறமகள் காக்கும் ஏனல் |
|
புறமும் தருதியோ? வாழிய, மழையே! |
|
இரவில் சிறைப்புறமாகத் தோழி சொல்லியது. - வீரை வெளியன் தித்தனார் | |
உரை |
மேல் |