வெறிபாடிய காமக் கண்ணியார் |
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் |
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் |
|
இது என அறியா மறுவரற் பொழுதில், |
|
5 |
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை |
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, |
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, |
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, |
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, |
|
10 |
உருவச் செந்தினை குருதியொடு தூஉய், |
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், |
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த |
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி, |
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் |
|
15 |
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, |
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை |
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, |
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, |
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த |
|
20 |
நோய் தணி காதலர் வர, ஈண்டு |
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே? |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார். | |
உரை |
பனி வரை நிவந்த பயம் கெழு கவாஅன், |
|
துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த |
|
இனிய உள்ளம் இன்னாஆக, |
|
முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் |
|
5 |
சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் |
அறிநதனள் அல்லள், அன்னை; வார்கோல் |
|
செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கி, |
|
கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் |
|
பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ, |
|
10 |
'முருகன் ஆர் அணங்கு' என்றலின், அது செத்து, |
ஓவத்தன்ன வினை புனை நல் இல், |
|
'பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் |
|
பண்டையின் சிறக்க, என் மகட்கு' எனப் பரைஇ, |
|
கூடு கொள் இன் இயம் கறங்க, களன் இழைத்து, |
|
15 |
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர், |
வெண் போழ் கடம்பொடு சூடி, இன் சீர் |
|
ஐது அமை பாணி இரீஇ, கைபெயரா, |
|
செல்வன் பெரும் பெயர் ஏத்தி, வேலன் |
|
வெறி அயர் வியன் களம் பொற்ப, வல்லோன் |
|
20 |
பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின், |
என் ஆம்கொல்லோ? தோழி! மயங்கிய |
|
மையற் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக |
|
ஆடிய பின்னும், வாடிய மேனி |
|
பண்டையின் சிறவாதுஆயின், இம் மறை |
|
25 |
அலர் ஆகாமையோ அரிதே, அஃதான்று, |
அறிவர் உறுவிய அல்லல் கண்டருளி, |
|
வெறி கமழ் நெடு வேள் நல்குவனெனினே, |
|
'செறிதொடி உற்ற செல்லலும் பிறிது' எனக் |
|
கான் கெழு நாடன் கேட்பின், |
|
30 |
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே. |
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளைச் சொல்லியது; தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக்கண்ணியார் | |
உரை |
மேல் |