வேம்பற்றூர்க் குமரனார் |
அரியற் பெண்டிர் அல்கிற் கொண்ட |
|
பகுவாய்ப் பாளைக் குவிமுலை சுரந்த |
|
அரி நிறக் கலுழி ஆர மாந்தி, |
|
செரு வேட்டு, சிலைக்கும் செங் கண் ஆடவர், |
|
5 |
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை, கோங்கின் |
எல்லி மலர்ந்த பைங் கொடி அதிரல் |
|
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி, |
|
கான யானை கவளம் கொள்ளும் |
|
அஞ்சு வரு நெறியிடைத் தமியர் செல்மார் |
|
10 |
நெஞ்சு உண மொழிபமன்னே தோழி! |
முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து, |
|
பெயல் உற நெகிழ்ந்து, வெயில் உறச் சாஅய், |
|
வினை அழி பாவையின் உலறி, |
|
மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே! |
|
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வேம்பற்றூர்க் குமரனார் | |
உரை |
மேல் |