ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் |
'கேளாய், எல்ல! தோழி! வேலன் |
|
வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய |
|
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின், |
|
உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு, |
|
5 |
அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் |
சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, |
|
நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, |
|
நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண் |
|
நெடுங் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை, |
|
10 |
யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் |
வானக மீனின் விளங்கித் தோன்றும், |
|
அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் |
|
திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், |
|
அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத் தோள், |
|
15 |
அணங்கு சால், அரிவையைக் காண்குவம் |
பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
|
வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - ....... | |
உரை |
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும், |
|
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள், |
|
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை |
|
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி, |
|
5 |
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர, |
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப் |
|
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண், |
|
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச் |
|
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே |
|
10 |
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து; |
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள், |
|
தன் ஓரன்ன தகை வெங் காதலன் |
|
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட, |
|
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல் |
|
15 |
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் |
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும் |
|
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர், |
|
வாணன் சிறுகுடி வடாஅது |
|
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே? |
|
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - ......... | |
உரை |
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, |
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, |
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி |
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், |
|
5 |
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் |
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு |
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் |
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, |
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, |
|
10 |
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, |
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, |
|
'தருமணற் கிடந்த பாவை என் |
|
அருமகளே என முயங்கினள் அழுமே! |
|
மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ...... | |
உரை |
மேல் |