எழினி (அஞ்சி)
|
|
அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை
|
|
ஒள் இலைத் தொடலை தைஇ, மெல்லென
|
|
நல் வரை நாடன் தற்பாராட்ட
|
|
யாங்கு வல்லுநள்கொல் தானே தேம் பெய்து,
|
5
|
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி,
|
|
ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்,
|
|
நிழற் கயத்தன்ன நீள் நகர் வரைப்பின்
|
|
எம்முடைச் செல்வமும் உள்ளாள், பொய்ம்
மருண்டு,
|
|
பந்து புடைப்பன்ன பாணிப் பல் அடிச்
|
10
|
சில் பரிக் குதிரை, பல் வேல் எழினி
|
|
கெடல் அருந் துப்பின் விடுதொழில் முடிமார்,
|
|
கனை எரி நடந்த கல் காய் கானத்து
|
|
வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர்
|
|
தேம் பிழி நறுங் கள் மகிழின், முனை கடந்து,
|
15
|
வீங்கு மென் சுரைய ஏற்றினம் தரூஉம்
|
|
முகை தலை திறந்த வேனிற்
|
|
பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - தாயங்கண்ணனார்
|
|
|
கேளாய், எல்ல! தோழி! வாலிய
|
|
சுதை விரிந்தன்ன பல் பூ மராஅம்
|
|
பறை கண்டன்ன பா அடி நோன் தாள்
|
|
திண் நிலை மருப்பின் வயக் களிறு
உரிஞுதொறும்,
|
5
|
தண் மழை ஆலியின் தாஅய், உழவர்
|
|
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
|
|
பனி படு சோலை வேங்கடத்து உம்பர்,
|
|
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும், நல்குவர்
|
|
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெரு நிரை
|
10
|
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய,
|
|
கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி,
|
|
நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட
|
|
கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய
|
|
வன்கண் கதவின் வெண்மணி வாயில்,
|
15
|
மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை,
|
|
நீர் ஒலித்தன்ன பேஎர்
|
|
அலர் நமக்கு ஒழிய, அழப் பிரிந்தோரே.
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளது வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.
-மாமூலனார்
|
|
மேல் |