தென்னவன்
|
|
தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
|
|
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
|
|
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
|
|
குறவர் தந்த சந்தின் ஆரமும்,
|
5
|
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
|
|
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
|
|
குழியில் கொண்ட மராஅ யானை
|
|
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
|
|
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
|
10
|
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
|
|
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
|
|
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
|
|
கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
|
|
சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
|
15
|
நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
|
|
மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
|
|
கவவு இன்புறாமைக் கழிக வள வயல்,
|
|
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
|
|
கழனி நெல் ஈன் கவைமுதல் அலங்கல்
|
20
|
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத்
துயல்வர,
|
|
புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
|
|
இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
|
|
வெண் குருகு நரல, வீசும்
|
|
நுண் பல் துவலைய தண் பனி நாளே!
|
பொருள்வயிற் பிரியலுற்ற
தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது;
உடம்பட்ட தூஉம் ஆம். - பெருந்தலைச்
சாத்தனார்
|
|
|
இகுளை! கேட்டிசின், காதல் அம் தோழி!
|
|
குவளை உண்கண் தெண் பனி மல்க,
|
|
வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை
|
|
பிறிது ஒன்று கடுத்தனள்ஆகி வேம்பின்
|
5
|
வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி,
|
|
உடலுநர்க் கடந்த கடல் அம் தானை,
|
|
திருந்துஇலை நெடு வேற் தென்னவன் பொதியில்,
|
|
அருஞ் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின்
|
|
ததும்பு சீர் இன் இயம் கறங்க, கைதொழுது,
|
10
|
உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇ,
|
|
கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
|
|
தோடும் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
|
|
ஆடினர் ஆதல் நன்றோ? நீடு
|
|
நின்னொடு தெளித்த நல் மலை நாடன்
|
15
|
குறி வரல் அரைநாட் குன்றத்து உச்சி,
|
|
நெறி கெட வீழ்ந்த துன் அருங் கூர் இருள்,
|
|
திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தட்
|
|
கொழு மடற் புதுப் பூ ஊதும் தும்பி
|
|
நல் நிறம் மருளும் அரு விடர்
|
20
|
இன்னா நீள் இடை நினையும், என் நெஞ்சே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாகத்,
தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்
சொல்லியது.- எழூஉப் பன்றி நாகன் குமரனார்
|
|
|
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
|
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு
யான்
|
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
|
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
|
5
|
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
|
|
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
|
|
ஏவல் இளையர் தலைவன், மேவார்
|
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
|
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
|
10
|
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
|
|
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
|
|
வரையரமகளிரின் அரியள்,
|
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
மேல் |