நன்னன் உதியன்
|
|
நன்னன் உதியன் அருங் கடிப் பாழி,
|
|
தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த
|
|
பொன்னினும் அருமை நன்கு அறிந்தும்,
அன்னோட்
|
|
துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய்
|
5
|
தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
|
|
கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
|
|
மாய இருள் அளை மாய் கல் போல,
|
|
மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும்,
|
|
மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ,
|
10
|
அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி,
|
|
இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப்
|
|
புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து
|
|
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக,
|
|
காமம் கைம்மிக உறுதர,
|
15
|
ஆனா அரு படர் தலைத்தந்தோயே!
|
அல்லகுறிப்பட்டுப்
பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -பரணர்
|
|
மேல் |