பொலம் பூட் கிள்ளி
|
|
'உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின்
|
|
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர்
போல,
|
|
தையல்! நின் வயின் பிரியலம் யாம்' எனப்
|
|
பொய் வல் உள்ளமொடு புரிவு உணக் கூறி,
|
5
|
துணிவு இல் கொள்கையர் ஆகி, இனியே
|
|
நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்புபூர,
|
|
நாம் அழ, துறந்தனர் ஆயினும், தாமே
|
|
வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை
|
|
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி,
|
10
|
நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி,
|
|
பூ விரி நெடுங் கழி நாப்பண், பெரும் பெயர்க்
|
|
காவிரிப் படப்பைப் பட்டினத்தன்ன
|
|
செழு நகர் நல் விருந்து அயர்மார், ஏமுற
|
|
விழு நிதி எளிதினின் எய்துகதில்ல
|
15
|
மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி,
|
|
நீடுஅமை நிவந்த நிழல் படு சிலம்பில்,
|
|
கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ
|
|
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி,
|
|
புலி உரி வரி அதள் கடுப்ப, கலி சிறந்து,
|
20
|
நாட் பூ வேங்கை நறு மலர் உதிர,
|
|
மேக்கு எழு பெருஞ் சினை ஏறி, கணக் கலை
|
|
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக்
|
|
கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய
|
|
சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைவி வற்புறுக்கும் தோழிக்குச்
சொல்லியது.- நக்கீரர்
|
|
மேல் |