மருதி
|
|
வான் உற நிவந்த நீல் நிறப் பெரு மலைக்
|
|
கான நாடன் உறீஇய நோய்க்கு, என்
|
|
மேனி ஆய் நலம் தொலைதலின், மொழிவென்;
|
|
முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண்,
|
5
|
கழாஅர்ப் பெருந் துறை விழவின் ஆடும்,
|
|
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு
மொய்ம்பின்,
|
|
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇ,
|
|
தாழ் இருங் கதுப்பின் காவிரி வவ்வலின்,
|
|
மாதிரம் துழைஇ, மதி மருண்டு அலந்த
|
10
|
ஆதிமந்தி காதலற் காட்டி,
|
|
படு கடல் புக்க பாடல்சால் சிறப்பின்
|
|
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்,
|
|
சென்மோ வாழி, தோழி! பல் நாள்,
|
|
உரவு உரும் ஏறொடு மயங்கி,
|
15
|
இரவுப் பெயல் பொழிந்த ஈர்ந் தண் ஆறே.
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி தலைமகட்குச் சொல்லியது. - பரணர்
|
|
மேல் |