மோரியர்
|
|
ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
|
|
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
|
|
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
|
|
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
|
5
|
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
|
|
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
|
|
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
|
|
கான மட மரைக் கணநிரை கவரும்
|
|
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
|
10
|
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
|
|
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
|
|
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
|
|
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
|
|
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
|
15
|
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
|
|
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
|
|
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
|
|
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
|
|
தலை நாள் அலரின் நாறும் நின்
|
20
|
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.
|
'பொருள்வயிற் பிரிந்து
நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற
தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித்
தோழி ஆற்றுவித்தது.- உமட்டூர் கிழார்
மகனார் பரங்கொற்றனார்
|
|
|
தூதும் சென்றன; தோளும் செற்றும்;
|
|
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்;
|
|
வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு
|
|
நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின்,
|
5
|
நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண்
|
|
தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித்
|
|
துனை கால் அன்ன புனை தேர்க் கோசர்
|
|
தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில்,
|
|
இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
|
10
|
தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
|
|
பணியாமையின், பகை தலைவந்த
|
|
மா கெழு தானை வம்ப மோரியர்
|
|
புனை தேர் நேமி உருளிய குறைத்த
|
|
இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர்,
|
15
|
மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை
|
|
வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி
|
|
மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு
|
|
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
|
|
நிரம்பா நீள் இடைப் போகி,
|
20
|
அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி
சொல்லியது. - மாமூலனார்
|
|
|
செய்வது தெரிந்திசின் தோழி! அல்கலும்,
|
|
அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய
|
|
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது,
|
|
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி,
|
5
|
வான் போழ் வல் வில் சுற்றி, நோன் சிலை
|
|
அவ் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு
இயல்
|
|
கனை குரல் இசைக்கும் விரை செலல் கடுங் கணை
|
|
முரண் மிகு வடுகர் முன்னுற, மோரியர்
|
|
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
|
10
|
விண்ணுற ஓங்கிய பனி இருங் குன்றத்து,
|
|
ஒண் கதிர்த் திகிரி உருளிய குறைத்த
|
|
அறை இறந்து, அவரோ சென்றனர்
|
|
பறை அறைந்தன்ன அலர் நமக்கு ஒழித்தே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு ஆற்றாளாய
தோழிக்குத் தலைமகள் சொல்லியது. -
மாமூலனார்
|
|
மேல் |