அணங்குடை நெடு வரை
|
|
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
|
|
கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
|
|
மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
|
|
இது என அறியா மறுவரற் பொழுதில்,
|
5
|
'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை
|
|
நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
|
|
முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
|
|
களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
|
|
வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
|
10
|
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,
|
|
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
|
|
ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
|
|
சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
|
|
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
|
15
|
ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,
|
|
நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
|
|
தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
|
|
இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்
மலிந்து,
|
|
நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
|
20
|
நோய் தணி காதலர் வர, ஈண்டு
|
|
ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
|
வரைவிடை வைத்துப் பிரிந்த
காலத்து, தலைமகள் ஆற்றாளாக,தோழி தலைமகனை
இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட
மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து
சிறைப்புறத்தானாக, தோழியாற்
சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள்
சொல்லியதூஉம் ஆம். - வெறிபாடிய காமக் கண்ணியார்.
|
|
உரை |
மேல் |