அம்ம வாழி கேளிர்
|
|
அம்ம வாழி, கேளிர்! முன் நின்று
|
|
கண்டனிர்ஆயின், கழறலிர்மன்னோ
|
|
நுண் தாது பொதிந்த செங் காற் கொழு முகை
|
|
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை,
|
5
|
பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை
|
|
எயிறுடை நெடுந் தோடு காப்ப, பல உடன்
|
|
வயிறுடைப் போது வாலிதின் விரீஇ,
|
|
புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின்
|
|
இவர் திரை தந்த ஈர்ங் கதிர் முத்தம்
|
10
|
கவர் நடைப் புரவி கால் வடுத் தபுக்கும்
|
|
நல் தேர் வழுதி கொற்கை முன் துறை
|
|
வண்டு வாய் திறந்த வாங்குகழி நெய்தற்
|
|
போது புறங்கொடுத்த உண்கண்
|
|
மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே.
|
கழறிய பாங்கற்குத் தலைமகன்
கழற்றெதிர் மறுத்தது. - வெண்கண்ணனார்
|
|
உரை |
மேல் |