அவ் விளிம்பு உரீஇய
|
|
அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை,
|
|
செவ் வாய்ப் பகழி, செயிர் நோக்கு ஆடவர்
|
|
கணை இடக் கழிந்த தன் வீழ்துணை உள்ளி,
|
|
குறு நெடுந் துணைய மறி புடை ஆட,
|
5
|
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை
|
|
மேய் பதம் மறுத்த சிறுமையொடு, நோய்
கூர்ந்து,
|
|
நெய்தல்அம் படுவில் சில் நீர் உண்ணாது,
|
|
எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும்,
|
|
பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம்,
|
10
|
எமியம் நீந்தும் எம்மினும், பனி வார்ந்து,
|
|
என்னஆம் கொல் தாமே 'தெண் நீர்
|
|
ஆய் சுனை நிகர் மலர் போன்ம்' என நசைஇ
|
|
வீ தேர் பறவை விழையும்
|
|
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே?
|
பொருள்வயிற் பிரிந்து
போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது. -எயினந்தை மகன் இளங்கீரனார்
|
|
உரை |
மேல் |