அவரை ஆய் மலர் உதிர
|
|
அவரை ஆய் மலர் உதிர, துவரின
|
|
வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப,
|
|
இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல்
பகன்றைக்
|
|
கறங்கு நுண் துவலையின் ஊருழை அணிய,
|
5
|
பெயல் நீர் புது வரல் தவிர, சினை நேர்பு
|
|
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க்
கழனி
|
|
நெல் ஒலி பாசவல் துழைஇ, கல்லெனக்
|
|
கடிது வந்து இறுத்த கண் இல் வாடை!
|
|
'நெடிது வந்தனை' என நில்லாது ஏங்கிப்
|
10
|
பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை
|
|
நம்வலத்து அன்மை கூறி, அவர் நிலை
|
|
அறியுநம் ஆயின், நன்றுமன் தில்ல;
|
|
பனி வார் கண்ணேம் ஆகி, இனி அது
|
|
நமக்கே எவ்வம் ஆகின்று;
|
15
|
அனைத்தால் தோழி! நம் தொல் வினைப் பயனே!
|
தலைமகன் பிரிவின்கண்
வற்புறுத்தும் தோழிக்குத், தலைமகள் 'ஆற்றேன்'
என்பது படச் சொல்லியது. - கொடியூர் கிழார்
மகனார் நெய்தல் தத்தனார்
|
|
மேல் |