அழிவு இல் உள்ளம்
|
|
அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப
|
|
வினை இவண் முடித்தனம்ஆயின், வல் விரைந்து
|
|
எழு இனி வாழிய நெஞ்சே! ஒலி தலை
|
|
அலங்கு கழை நரலத் தாக்கி, விலங்கு எழுந்து,
|
5
|
கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி
|
|
விடர் முகை அடுக்கம் பாய்தலின், உடன்
இயைந்து,
|
|
அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும்
|
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, கைம்மிக்கு,
|
|
அகன் சுடர் கல் சேர்பு மறைய, மனைவயின்
|
10
|
ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின்,
|
|
குறு நடைப் புறவின் செங் காற் சேவல்
|
|
நெடு நிலை வியல் நகர் வீழ்துணைப் பயிரும்
|
|
புலம்பொடு வந்த புன்கண் மாலை,
|
|
'யாண்டு உளர்கொல்?' எனக் கலிழ்வோள்
எய்தி,
|
15
|
இழை அணி நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலைச்
|
|
சிலம்பின் கூதளங் கமழும் வெற்பின்
|
|
வேய் புரை பணைத் தோள், பாயும்
|
|
நோய் அசா வீட, முயங்குகம் பலவே.
|
தலைமகன் இடைச் சுரத்து
அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது. -
ஆலம்பேரி சாத்தனார்
|
|
மேல் |