அறம் தலைப்பிரியாது
|
|
'அறம் தலைப்பிரியாது ஒழுகலும், சிறந்த
|
|
கேளிர் கேடு பல ஊன்றலும், நாளும்
|
|
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்' எனச்
|
|
செய்வினை புரிந்த நெஞ்சினர், 'நறு நுதல்
|
5
|
மை ஈர் ஓதி! அரும் படர் உழத்தல்
|
|
சில் நாள் தாங்கல்வேண்டும்' என்று, நின்
|
|
நல் மாண் எல் வளை திருத்தினர்ஆயின்,
|
|
வருவர் வாழி, தோழி! பல புரி
|
|
வார் கயிற்று ஒழுகை நோன் சுவற் கொளீஇ,
|
10
|
பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ,
|
|
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட,
|
|
காடு கவின் அழிய உரைஇ, கோடை
|
|
நின்று தின விளிந்த, அம் பணை, நெடு வேய்க்
|
|
கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம்
|
15
|
கழங்கு உறழ் தோன்றல, பழங் குழித் தாஅம்
|
|
இன் களி நறவின் இயல் தேர் நன்னன்
|
|
விண் பொரு நெடு வரைக் கவாஅன்
|
|
பொன் படு மருங்கின் மலை இறந்தோரே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
-முள்ளியூர்ப் பூதியார்
|
|
மேல் |