அறியாய், வாழி தோழி! இருள்
|
|
அறியாய், வாழி தோழி! இருள் அற
|
|
விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரிக்
|
|
கடுங் கதிர் எறித்த விடுவாய் நிறைய,
|
|
நெடுங் கால் முருங்கை வெண் பூத் தாஅய்,
|
5
|
நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை,
|
|
வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப்
பிணவொடு
|
|
கள்ளிஅம் காட்ட கடத்திடை உழிஞ்சில்
|
|
உளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை
|
|
பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின்,
|
10
|
விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்
|
|
எழுத்துடை நடுகல் இன் நிழல் வதியும்
|
|
அருஞ் சுரக் கவலை நீந்தி, என்றும்,
|
|
'இல்லோர்க்கு இல்' என்று இயைவது கரத்தல்
|
|
வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும்
|
15
|
பொருளே காதலர் காதல்;
|
|
'அருளே காதலர்' என்றி, நீயே.
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - சீத்தலைச்
சாத்தனார்
|
|
மேல் |