அன்பும், மடனும், சாயலும்
|
|
அன்பும், மடனும், சாயலும், இயல்பும்,
|
|
என்பு நெகிழ்க்கும் கிளவியும், பிறவும்,
|
|
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி,
|
|
இன்றே இவணம் ஆகி, நாளை,
|
5
|
புதல் இவர் ஆடு அமை, தும்பி குயின்ற
|
|
அகலா அம் துளை, கோடை முகத்தலின்,
|
|
நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார்
கோல்
|
|
ஆய்க் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்,
|
|
தேக்கு அமல் சோலைக் கடறு ஓங்கு அருஞ் சுரத்து,
|
10
|
யாத்த தூணித் தலை திறந்தவைபோல்,
|
|
பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர்
|
|
கழல் துளை முத்தின் செந் நிலத்து உதிர,
|
|
மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச்
|
|
சேக்குவம் கொலோ நெஞ்சே! பூப் புனை
|
15
|
புயல் என ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
செறி தொடி முன்கை, நம் காதலி
|
|
அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே?
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. -
எயினந்தை மகனார் இளங்கீரனார்
|
|
மேல் |