ஆள் வழக்கு அற்ற
|
|
ஆள் வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற,
|
|
நீள் எரி பரந்த நெடுந் தாள் யாத்து,
|
|
போழ் வளி முழங்கும், புல்லென் உயர்சினை,
|
|
முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி,
|
5
|
ஊன் பதித்தன்ன வெருவரு செஞ் செவி
|
|
எருவைச் சேவல் கரிபு சிறை தீய,
|
|
வேனில் நீடிய வேய் உயர் நனந்தலை,
|
|
நீ உழந்து எய்தும் செய்வினைப் பொருட் பிணி
|
|
பல் இதழ் மழைக் கண் மாஅயோள்வயின்
|
10
|
பிரியின் புணர்வதுஆயின் பிரியாது,
|
|
ஏந்து முலை முற்றம் வீங்க, பல் ஊழ்
|
|
சேயிழை தெளிர்ப்பக் கவைஇ, நாளும்
|
|
மனைமுதல் வினையொடும் உவப்ப,
|
|
நினை மாண் நெஞ்சம்! நீங்குதல் மறந்தே.
|
பொருள்வயிற் பிரிவு
கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது.- பெருந்தேவனார்
|
|
உரை |
மேல் |