இடம் படுபு அறியா
|
|
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
|
|
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
|
|
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
|
|
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
|
5
|
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
|
|
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
|
|
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
|
|
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
|
|
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
|
10
|
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்
|
|
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
|
|
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
|
|
பெருங் குளம் காவலன் போல,
|
|
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள்
சொல்லியது. - நக்கண்ணையார்
|
|
மேல் |