இம்மென் பேர் அலர்
|
|
இம்மென் பேர் அலர், இவ் ஊர், நம்வயின்
|
|
செய்வோர் ஏச் சொல் வாட, காதலர்
|
|
வருவர் என்பது வாய்வதாக,
|
|
ஐய, செய்ய, மதன் இல, சிறிய நின்
|
5
|
அடி நிலன் உறுதல் அஞ்சி, பையத்
|
|
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலி,
|
|
காணிய வம்மோ? கற்பு மேம்படுவி!
|
|
பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து,
|
|
யானைச் செல் இனம் கடுப்ப, வானத்து
|
10
|
வயங்கு கதிர் மழுங்கப் பாஅய், பாம்பின்
|
|
பை பட இடிக்கும் கடுங் குரல் ஏற்றொடு
|
|
ஆலி அழி துளி தலைஇக்
|
|
கால் வீழ்த்தன்று, நின் கதுப்பு உறழ் புயலே!
|
பிரிவின்கண் வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. -
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
|
|
மேல் |