இருங் கழி முதலை
|
|
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
|
|
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
|
|
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
|
|
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
|
5
|
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
|
|
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
|
|
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
|
|
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
|
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
|
10
|
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
|
|
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
|
|
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
|
|
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
|
|
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என்
களைமா
|
15
|
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
|
|
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
|
|
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
|
|
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
|
முன் ஒரு காலத்து, நெஞ்சினால்
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான்,
தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று
அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக்
கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன்,
பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார். |
|
மேல் |