இருந்த வேந்தன் அருந் தொழில்
|
|
'இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
|
|
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
|
|
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
|
|
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
|
5
|
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில்,
|
|
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
|
|
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
|
|
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
|
|
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
|
10
|
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
|
|
உரைமதி வாழியோ, வலவ!' என, தன்
|
|
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
|
|
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
|
|
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.
|
வினை முற்றிய தலைமகனது வரவு
கண்டு, உழையர் சொல்லியது. - ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
மேல் |